திருச்சி அருகே நடந்த சாலை விபத்தில் செய்தியாளர், நண்பர் உயிரிழப்பு

திருச்சி அருகே நடந்த சாலை விபத்தில் செய்தியாளர், நண்பர் உயிரிழப்பு
X

திருச்சி அருகே மரத்தில் மோதி விபத்துக்குள்ளான கார்.

திருச்சி அருகே கார் மரத்தில் மோதிய விபத்தில் செய்தியாளரும் அவரது நண்பரும் உயிரிழந்தனர்.

பெரம்பலூரில் இருந்து திருச்சி நோக்கி வந்த சொகுசு கார் ஒன்று இன்று மாலை சிறுகனூர் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்து சாலையோரம் இருந்த மரத்தில்மோதி விபத்துக்கு உள்ளானது.

இந்த விபத்தில் அந்த காரைஓட்டி வந்த திருச்சி தினமணி நாளிதழின் செய்தியாளர் கோபி (வயது 36), மற்றும் அவரது நண்பர் ஒருவரும் பலத்தகாயங்களுடன் அலறிதுடித்துள்ளனர்.இந்த விபத்தை பார்த்த மற்ற வாகன ஓட்டுநர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் காரில் உயிருக்குபோராடியவர்களை மீட்கமுயற்சி செய்துள்ளனர். ஆனால் மீட்க முடியாதநிலையில்போலீசாரும்,ஆம்புலன்ஸ் ஊழியர்களும்சம்பவ இடத்திற்கு வந்து மீட்புபணியில் ஈடுபட்டனர்.


இந்த நிலையில் செய்தியாளர் கோபி மற்றும் அவருடன்பயணித்த நண்பரையும்பிரேதமாகவே மீட்டு எடுத்து திருச்சி அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனர். இந்தவிபத்து குறித்து தகவலறிந்தசக செய்தியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.விபத்தில் பலியானசெய்தியாளர் கோபி காஞ்சிபுரத்திலிருந்து கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்புதான் திருச்சிக்கு மாற்றலாகி வந்துள்ளார்.

அவருக்கு திருமணமாகி மனைவியும் 2 குழந்தைகள்உள்ளனர். கடந்த சிலநாட்களுக்கு முன்புதான் தனது2-வது குழந்தையின்பிறந்தநாளை கொண்டாடி சகசெய்தியாளர்களுக்கு இனிப்புவழங்கிய கோபியின் மரணம்சக செய்தியாளர்களை பதற வைத்துள்ளது. பத்திரிகையாளர் சங்கத்தினர் கோபி மறைவிற்கு அனுதாபம் தெரிவித்து உள்ளனர்.

கோபியின் சொந்த ஊர் திருச்செங்கோடு ஆகும். கோபி திருச்சியில் தனியார் மேன்ஷனில் தங்கி இருந்து பணியாற்றி வந்தார். காரை ஓட்டி வந்த செய்தியாளர் கோபி மற்றும்அவரது நண்பரும் சீட் பெல்ட்அணிந்து வந்த நிலையிலும் இந்த விபத்திலிருந்து தப்பிக்கமுடியாதது துரதிர்ஷ்டமானது. இந்த விபத்து பற்றி சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது