திருச்சி தென்னூரில் பாதாள சாக்கடை கழிவு நீரால் தொற்று நோய் பரவும் அபாயம்

திருச்சி தென்னூரில் பாதாள சாக்கடை கழிவு நீரால் தொற்று நோய் பரவும் அபாயம்
X

திருச்சி தென்னூர் குத்பிஷா நகரில் பாதாள சாக்கடை கழிவு நீர் வெளியேறி செல்லும் காட்சி.

திருச்சி தென்னூரில் பாதாள சாக்கடை கழிவு நீரால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சி 28வது வார்டை சேர்ந்தது தென்னூர் குத்பிஷாநகர்.மக்கள் தொகை மிகுந்த இங்கு ஏராளமான வீடுகள் உள்ளன.இங்குள்ள பாதாளசாக்கடை கால்வாய்களில் இருந்து தண்ணீர் வெளியேறி தெருக்களில் செல்கிறது. இதனால் சுகாதார கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் எவ்வித பலனுமில்லை.முதல்வர் தனிப்பிரிவிற்கு புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையுமில்லை. மேலும் குடிநீரில் கழிவுநீரும் கலப்பதால் நோய் பெருகும் அபாயமும் உள்ளது என அப்பகுதி மக்கள் புகார் கூறி வருகிறார்கள். இனியாவது மாநகராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதுஅப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!