ரெட்டமலை கோயில் வளாகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி கலெக்டரிடம் மனு

ரெட்டமலை கோயில் வளாகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி கலெக்டரிடம் மனு
X

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் (பைல் படம்)

திருச்சி ரெட்டமலை கருப்பு கோயில் வளாகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடை பெற்றது. கலெக்டர் சிவராசு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். இதில் ரெட்டமலை ஒண்டிக்கருப்பு சாமி கோயில் கமிட்டி செயலாளர் நவல்பட்டு தெற்கு தெருவை சேர்ந்த அய்யாசாமி மனு அளித்தார்.

அதில் திருச்சி மாவட்டம் பிராட்டியூர் கிராமம் எல்லைக்குள் ரெட்டமலை ஒண்டிக்கருப்பு சாமிகோயில் உள்ளது. இந்த கோயில் வளாகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும். கடந்த 2008, 2009-ம் ஆண்டுகளில் அரசு அதிகாரிகள் அளித்த பரிந்துரை அனுமதி கடிதங்கள் அடிப்படையில் அனுமதி வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!