மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க ஆசிரியர் பயிற்சி நிறுவனம் வேண்டுகோள்

மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க ஆசிரியர் பயிற்சி நிறுவனம் வேண்டுகோள்
X

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம்  (பைல் படம்)

தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளதால் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அரசுத்தேர்வுகள் இயக்ககத்தால் நடத்தப்பட்ட செப்டம்பர் 2021 முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வு தேர்வர்களின் தேர்வு முடிவுகள் அவரவர் பயின்ற ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் வெளியிடப்பட்டது. தனித்தேர்வர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்த குமுளூர், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

மாணவ-மாணவிகள் விடைத்தாள் ஒளி நகல் பெறவும், விடைத்தாள் மறுக்கூட்டல் செய்யவும் விண்ணப்பிக்க விரும்புவோர் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் அதில் குறிப்பிட்டுள்ள கட்டணத்தொ கையை இன்று (புதன்கிழமை) காலை 10 மணி முதல் வருகிற 4-ந்தேதி மாலை 5 மணி வரை குமுளூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நேரடியாக செலுத்த வேண்டும்.

தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். விடைத்தாளின் ஒளி நகல் பெறப்பட்ட பின்னர் விருப்பமுள்ள தேர்வர்கள் மறுகூட்டல் மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் வேண்டி விண்ணப் பிப்பவர்கள் ஒரு பாடத்துக்கு ரூ.275-ம், விடைத்தாளின் மறு கூட்டலுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஒரு பாடத்துக்கு ரூ.205-ம் கட்டணம் செலுத்தவேண்டும். இந்த தகவலை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் வின்சென்ட்பால் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
தேய்பிறை அஷ்டமி விழா கோலாகலம்: மல்லசமுத்திரம் காலபைரவர் கோயிலில் சிறப்பு வழிபாடு