திருச்சி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் முகாமில் 441 மனுக்களுக்கு தீர்வு

திருச்சி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் முகாமில் 441 மனுக்களுக்கு தீர்வு
X

திருச்சியில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு கலெக்டர் பிரதீப்குமார் அடையாள அட்டை வழங்கினார்.

திருச்சி மாவட்ட பொது மக்கள் குறை தீர்க்கும் முகாமில் 441 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், சாதிச் சான்றுகள், இதரச் சான்றுகள், குடும்ப அட்டை, முதியோர் உதவித் தொகை, நலத் திட்ட உதவிகள், அடிப்படை வசதிகள், திருமண உதவித் தொகை, பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 441 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில், முதலமைச்சரின் நிவாரண நிதியின் கீழ் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த 3 பேர், பாம்பு கடித்து உயிரிழந்த 1 நபர் என உயிரிழந்த 4 நபர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகையாக ரூ. 4 இலட்சத்திற்கான காசோலைகளையும், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வேண்டி விண்ணப்பம் அளித்த 6 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டையினையும், தூய்மைப் பணியாளர்களுக்கான நலவாரிய அடையாள அட்டை 20 நபர்களுக்கும், முதியோர்உதவித் தொகை வேண்டி மனு அளித்த முதியவருக்கு உடனடி நடவடிக்கை மேற்கொண்டு இம்முதியவருக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்குவதற்கான ஆணையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.அபிராமி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர்சி.அம்பிகாபதி, பழங்குடியினர் நல திட்ட அலுவலர் கீதா ஆகியோர் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா