திருச்சி காவிரி பாலத்தை முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வையிட கோரிக்கை
முதல்வர் மு.க. ஸ்டாலின்.
Trichy News Tamil - தமிழக முதல் அமைச்சர் முகஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளல் கலந்து கொள்வதற்காக வருகிற 26ம் தேதி திருச்சி வருகிறார். திருச்சிக்கு வருகை தரும் தமிழக முதல்வருக்கு மக்கள் நீதிமய்யம் கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் ஒரு வேண்டு கோள் விடுத்துள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
திராவிட முன்னேற்ற கழக ஆட்சி காலத்தில் திருச்சி மாநகரின் பிரதான பகுதிகளை இணைக்கும் சிந்தாமணி - மாம்பழச்சாலை காவிரி மேம்பாலம் கட்டப்பட்டது. இதனை தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் காவிரி மேம்பாலத்தை சீரமைக்கிறேன் என்ற பெயரில் செங்கற்களால் காவிரி பாலத்தின் கைப்பிடி சுவர்களை கட்டியதுடன், பாலத்தின் ஸ்திர தன்மையையே கேள்வி குறியாக்கும் வகையில் மேம்பால பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இது அப்பொழுதைய காலத்தில் மிகுந்த விமர்சனத்திற்கு உள்ளானது. மேலும் சீரமைப்பதற்கு முன்பாக நன்றாக இருந்த காவிரி மேம்பாலம்சீரமைப்பிறகு பிறகு பயணிக்க முடியாத அளவிற்கு உருக்குலைந்து விட்டது. மேலும் தற்பொழுதைய திராவிட முன்னேற்ற கழக உள்ளாட்சித்துறை அமைச்சர் காவிரி மேம்பாலத்தை ஆய்வு செய்து காவிரி மேம்பாலத்தை சீரமைப்பதோடு அதன் அருகிலே புதிதாக மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். ஆனால் மேற்படி மேம்பாலத்தில் முறையாக சீரமைக்கப்படாததால் மேற்படி காவிரி மேம்பாலத்தில் பயணம் செய்யும் பயணிகளின் கண்ணீர் அந்த காவிரிஆற்றிலே கலந்துவிடுவது கூடுதல் சோகம்.
எனவே திருச்சி மாநகருக்கு வருகை தரும் தாங்கள் திருச்சி மாநகர மக்கள் தினம், தினம் அனுபவிக்கும் காவிரி மேம்பால துன்ப பயணத்தை நேரில் ஆய்வு செய்து உரிய உத்தரவுகளை பிறப்பிக்க மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வலியுறுத்தி கேட்டுகொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu