அபாயகரமான நிலையில் உள்ள மின் கம்பங்களை மாற்றிவிட்டு சாலை அமைக்க கோரிக்கை

அபாயகரமான நிலையில் உள்ள மின் கம்பங்களை மாற்றிவிட்டு சாலை அமைக்க கோரிக்கை
X
திருச்சி பிராட்டியூரில் அபாயகரமான நிலையில் உள்ள மின் கம்பங்களை மாற்றிவிட்டு சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருச்சி மாநகராட்சியின் பல பகுதிகளிலும் தற்போது மழை நீர் வடிகால்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மழை நீர் வடிகால் அமைத்து முடிக்கப்பட்ட இடங்களில் சாலை அமைக்கும் பணிகளும் தொடர் நடவடிக்கையாக எடுக்கப்பட்டது. பணிகள் இன்னும் முழுமை அடையாமல் இருப்பதால் அந்த பகுதிகளில் சாலை அமைக்க முடியவில்லை.

இது ஒரு புறம் இருக்க திருச்சி மாநகராட்சி பிராட்டியூர் பகுதியில் உள்ள தெருக்களில் சாலைகள் அமைப்பதற்காக மாநகராட்சி திட்டம் தீட்டியுள்ளது. அதன் முன் நடவடிக்கையாக தற்போது அங்குள்ள அனைத்து தெருக்களிலும் மழை நீர் வடிகால்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணி முடிவடைந்ததும் அங்கு சாலைகள் அமைக்க எஸ்டிமேட் போடப்பட்டுள்ளது.

ஆனால் பிராட்டியூர் மேலத்தெரு, கீழத்தெரு, மேல தெரு 1-வது விதி,மேல தெரு 3-வது வீதி மற்றும் மயான வளாகத்தின் அருகில் உள்ள வாய்க்கால், பிராட்டியூர் எம்.சி.சி. ஆகிய இடங்களில் மிகவும் பழுதடைந்த நிலையில் மின்கம்பங்கள் சாலையின் நடுவில் நிற்கின்றன. இந்த மின்கம்பங்களை அகற்றி சரியான இடங்களில் அமைத்துவிட்டு அதன் பின்னர் சாலை அமைத்தால் நன்றாக இருக்கும். ஆனால் மின்கம்பங்களை அப்படியே நிற்க வைத்துவிட்டு சாலை அமைக்கும் பணியை செய்யப்போவதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறி வருகிறார்கள்.

avalஇந்த திட்டத்தை கைவிட்டு முதற்கட்டமாக மின்க ம்பங்களை மாற்றி நட வேண்டும். அதன் பின்னரே சாலை அமைக்கும் பணிகளை தொடங்க வேண்டும் என வாட் யுவர் பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.இந்த மின்கம்பங்கள் மிக ஆபத்தான நிலையில் இருப்பதால் அவை எந்த நேரம் வேண்டுமானாலும் சரிந்து விழுந்து உயிர் சேதத்துடன் கூடிய விபத்தை ஏற்படுத்தலாம் என்றும் அப்பகுதி மக்கள் பயத்தில் உள்ளனர். இந்த பயத்தை போக்க மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!