மழை நீர் வடிகால் அமைக்கும் முன் காஜாமலை மெயின்ரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை

மழை நீர் வடிகால் அமைக்கும் முன் காஜாமலை மெயின்ரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை
X

திருச்சி காஜாமலை மெயின் ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் மழை நீர் வடிகால் கட்டப்படுகிறது.

மழை நீர் வடிகால் அமைக்கும் முன் திருச்சி காஜாமலை மெயின்ரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

திருச்சி காஜாமலை மெயின் ரோட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டு மழை நீர் வடிகால் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் சமூக அலுவலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்/

திருச்சி மன்னார்புரம் நால்ரோடு மற்றும் டி.வி.எஸ். டோல்கேட்டில் இருந்து கே.கே. நகர் ,விமான நிலையம் பகுதிகளை இணைக்கும் ஒரு முக்கிய இணைப்பு சாலையாக காஜாமலை மெயின் ரோடு உள்ளது. இந்த சாலையில் ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் மத்திய அரசுக்கு சொந்தமான தானியக்கிடங்கு, இரும்பு கிடங்கு ஆகியவை உள்ளன .காஜாமலை சாலையை அகலப்படுத்தும் பணியின் ஒரு கட்டமாக தற்போது மழை நீர் வடிகால் அமைக்கும் பணியானது மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் தற்போது நடந்து வருகிறது.

இந்த சாலையை அண்ணா விளையாட்டரங்கில் இருந்து கே.கே. நகர் பஸ் நிலையம் வரை அகலப்படுத்தும் பணி இரு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. சாலையின் இரு புறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு மழைநீர் வடிகால் கட்டி சாலையை அகலப்படுத்துவது தான் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் .

ஆனால் காஜாமலை மெயின் ரோட்டில் தற்போது ஆக்கிரமிப்புகள் எதுவும் அகற்றப்படாமல் பெயரளவிற்கு ஆக்கிரமிப்பாளர்களின் வீடு மற்றும் கடைகளின் படிக்கட்டுகள் மற்றும் லேசாக இடிக்கப்பட்டு மழை நீர் வடிகால் கட்டுவதற்காக ஜே.சி.பி. எந்திரம் மூலம் பணிகளை செய்து வருகிறார்கள். இந்த சாலை ஒரு முக்கியமான இணைப்பு சாலையாக இருப்பதால் எந்த நேரமும் அரிசி குடோன் மற்றும் இரும்பு குடோனுக்கு போகும் லாரிகள் அதிவேகத்துடன் செல்கின்றன.

எனவே ஆக்கிரமிப்புகளை முற்றிலுமாக அகற்றிவிட்டு அதன் பின்னரே மழைநீர் வடிகால் கட்டி சாலையைஅகலப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து வந்துள்ளது. சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இதில் உடனடி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது முக்கிய எதிர்பார்ப்பாகும்.

Tags

Next Story
நைட்ல இதெல்லாம் சாப்பிட கூடாதா...? அச்சச்சோ !.. இது தெரியாம இருந்துடீங்களே !