/* */

திருச்சி மாநகராட்சிக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கோரிக்கை

CPI Political Party- திருச்சி மாநகராட்சிக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

திருச்சி மாநகராட்சிக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கோரிக்கை
X

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட மேற்கு பகுதி குழு கூட்டம் உறையூரில் நடந்தது.

CPI Political Party- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட மேற்கு பகுதி குழு கூட்டம் உறையூரில் மாவட்ட குழு உறுப்பினர் சூர்யா தலைமையில் நடைபெற்றது. மேற்குப் பகுதி செயலாளர் சுரேஷ் முத்துசாமி துணைச் செயலாளர்கள் முருகன், இப்ராஹிம் பொருளாளர் ரவீந்திரன் மாமன்ற முன்னாள் உறுப்பினர் வை.புஷ்பம் உள்ளிட்ட கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.மாமன்ற உறுப்பினர் க. சுரேஷ் சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 25 வது மாநாடு திருப்பூரில் நடைபெறுவதையொட்டி மாநாட்டின் துவக்கத்தில் ஏற்றப்படும் கொடியினை சென்ற மாநாடு நடைபெற்ற மன்னார்குடியில் இருந்து கொண்டுவரும் கொடி பயணத்திற்கு ஆகஸ்ட் 4 வியாழன் காலை 11:30 மணியளவில் உறையூர் குறத் தெருவில் சிறப்பான வரவேற்பு கூட்டம் நடத்துவது மற்றும் ஆடி 18 ம்நாளில் காவிரி அய்யாளம்மன் படித்துறைக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வருகைதருவார்கள். திருச்சி மாநகராட்சி நிர்வாகம் உறையூர் திருத்தாந்தோணிரோடு முதல் கோணக்கரை வரையிலான சாலையின் இருபுறமும் உள்ள குப்பை மேடுகளை அகற்றி சுத்தம் செய்திடவும் அய்யாளம்மன் படித்துறை பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றி தூய்மையாக வைத்துக் கொள்வதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2 Aug 2022 4:35 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  2. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  3. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  4. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  5. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  6. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  7. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  9. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  10. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...