சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு சிறப்பு அஞ்சல் உறை வெளியிட கோரிக்கை

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு சிறப்பு அஞ்சல் உறை வெளியிட கோரிக்கை
X
திருச்சி கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளரிடம் அஞ்சல் தலை சேகரிப்போர் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
விடுபட்ட சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு சிறப்பு அஞ்சல் உறை வெளியிட கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

வரலாற்றில் இடம் பெறத் தவறிய தமிழக சுதந்திர போராட்ட வீரர்களுக்கு சிறப்பு அஞ்சல் உறை வெளியிட வேண்டும் என திருச்சி பிளாட்டலிக் கிளப் செயலர் விஜயகுமார் திருச்சி முதுநிலை அஞ்சல் அதிகாரி அப்துல் லத்தீப், துணை அஞ்சல் அதிகாரி செந்தில்குமார் முன்னிலையில் முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் கணபதி சுவாமிநாதனிடம் அஞ்சல்தலை சேகரிப்பாளர்களுடன் மனு அளித்தார்.

அந்த மனுவில், இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி 'ஆசாதி கா அம்ருத் மகோத்சவ்' கொண்டாட்டம் ஓராண்டு நடைபெறுகிறது.

இந்நேரத்தில் சுதந்திர போராட்டத்துக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்துகிறோம்.

அவர்களது சுதந்திர போராட்டத்தின் தியாகம், சிந்தனைகள், சாதனைகள், செயல் திறன், பிரச்சினைக்கு தீர்வு காணும் திறன் ஆகிய அம்சங்களை அனைவரும் அறியும் விதமாக இந்திய அரசு ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ், கலாச்சார அமைச்சகம்,நாடு முழுவதும் உள்ள அஞ்சல் வட்டங்களால் வரலாற்றில் இடம் பெறத் தவறிய சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டு வருகிறது.

அவ்வகையில் வரலாற்றில் இடம் பெறத் தவறிய சுதந்திரப் போராட்ட தமிழக வீரர்களான திருவையாறு சுப்பிரமணிய ஐயர், திருநெல்வேலி வ.உ. சிதம்பரம் பிள்ளை, வத்தலக்குண்டு சுப்பிரமணிய சிவா, சுப்பிரமணிய பாரதியார், டி.எம். மூக்கன் ஆசாரி, சக்கரை செட்டியார், வரதராஜுலு நாயுடு, சேலம் விஜயராகவாச்சாரியார், காஞ்சிபுரம் கிருஷ்ணசாமி சர்மா, லட்சுமி நரசு செட்டியார், வ.வே.சு.ஐயர், ஆச்சார்யா, சேலம் ராமசாமி முதலியார், ஜி.ஏ நடேசன், பண்டிதை அசலாம்பிகை அம்மையார், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, வீரவாஞ்சி, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், திரு வி.கல்யாண சுந்தரனார், சிங்காரவேலர், நரசிம்மலு நாயுடு, தீர்த்தகிரி முதலியார், அர்த்தநாரீச வர்மா, அல்லயன்ஸ் குப்புசாமி ஐயர், இராஜகோபாலாச்சாரியார், தீரர் சத்தியமூர்த்தி, ஜீவானந்தம், அரங்கசாமி ராஜா, பி.எஸ்.குமாரசாமி ராஜா, பெரியார் ஈ.வே. ராமசாமி, வெ. சாமிநாத சர்மா, சோமயாஜுலு, எ.ம்ஏ.ஈஸ்வரன், மதுரை மௌலானா சாகிப், டி.எஸ்.எஸ்.ராஜன், பாரதிதாசன், கடலூர் அஞ்சலையம்மாள், கேப்டன் லட்சுமி, விருதுநகர் கே.எஸ். முத்துசாமி ஆசாரி, பசும்பொன் முத்துராமலிங்க தேவர், சேலம் ஏ.சுப்பிரமணியம், சிதம்பர பாரதி, கே.வி.ராமசாமி, என்,ஜி.ராமசாமி,

ஆர்.வேலுமயில் தேவர், ஜே.சி.குமரப்பா, பாஷ்யம் என்கிற ஆர்யா, ஜார்ஜ் ஜோசப், எல்.கிருஷ்ணசுவாமி பாரதி, லட்சுமிகாந்தன் பாரதி, முத்துக் கருப்ப பிள்ளை, சர்தார் வேதரத்தினம் பிள்ளை, வைரப்பன், பத்மாஸனி அம்மையார், ருக்மினி லட்சுமிபதி, திருப்பூர் குமரன், பி.எஸ்.சுந்தரம், பத்மாவதி ஆஷர், சொர்ணத்தம்மாள், மீனா கிருஷ்ணசாமி, வைத்தியநாத ஐயர், கக்கன், சர்தார் ஆதிகேசவ நாயகர், பெரியார் ஈ.வே.ரா. நாகம்மை, எஸ்.ஆர். கண்ணம்மாள், ராமுத்தேவர், தில்லையாடி வள்ளியம்மை, மதுரகவி பாஸ்கர தாஸ், விஸ்வநாததாஸ், அவ்வை டி.கே.சண்முகம், சீனிவாசராவ்,

டி.எஸ். அவிநாசிலிங்கம், கம்பம் பீர்முஹம்மது, பி.எஸ்.வசந்தன், நன்னா சாகிப், ஏ.கே.செட்டியார், கே.ஆர். மஞ்சம்மாள், யாகூப் ஹாசன், டாக்டர் டி.எஸ்.சௌந்தரம், பூ.பூ.ராமு, எஸ்.ஓ.எஸ்.பி. உடையப்பா, கேப்டன் ஜானகி தேவர், மா.பொ. சிவஞானம் உட்பட பலர் உள்ளனர்.

மேற்கண்ட பட்டியலில் வரலாற்றில் இடம் பெறத் தவறிய தமிழகத்தின் சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தையொட்டி ஆசாதி கா அம்ருத் மகோத்சவ் நிகழ்வாக வெளிவரக்கூடிய சிறப்பு அஞ்சல் உறை வரிசையில் வரலாற்றில் இடம் பெற தவறிய தமிழக சுதந்திர போராட்ட வீரர்களை இடம்பெற வேண்டுமென, சுதந்திர போராட்ட தமிழக வீரர்கள் வாழ்க்கை வரலாறு கட்டுரையையும் வழங்கி கேட்டுக்கொண்டுள்ளார்.

நிகழ்ச்சியில் திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் நிறுவனர் நாசர், ரகுபதி, சதீஷ் பாபு, கார்த்திகேயன், லால்குடி விஜய்,தங்க சுப்ரமணியன், சர்மா உள்ளிட்ட பல அஞ்சல்தலை சேகரிப்பாளர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை-  நிறுவனங்களுக்கு அறிவுரை