/* */

குடியரசு தின நாளில் விடுமுறை அளிக்காத 104 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

குடியரசு தின விடுமுறை நாளில் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 104 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

குடியரசு தின நாளில்  விடுமுறை அளிக்காத 104 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
X

பைல் படம்.

திருச்சி தொழிலாளர் உதவி ஆணையர் (சட்ட அமலாக்கம்) தங்கராசு தலைமையில், தொழிலாளர் துணை மற்றும் உதவி ஆய்வாளர்களுடன் நேற்று விடுமுறை தினமான குடியரசு தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட 147 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்காத 104 நிறுவனங்கள் கண்டறியப்பட்டு, அவற்றின் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இனிவரும் தேசிய விடுமுறை நாட்களில் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்படும். தேசிய விடுமுறை நாட்களில் தொழிலாளர்களுக்கு விடுப்பு அளிக்காமல் பணிபுரிய நிர்ப்பந்திக்கும் வர்த்தக நிறுவனங்கள் மீது 1958-ம் ஆண்டு தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை) சட்டத்தின் கீழ் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி தொழிலாளர் உதவி ஆணையர் (சட்ட அமலாக்கம்) தங்கராசு தெரிவித்துள்ளார்.

Updated On: 27 Jan 2022 6:17 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவு துறை தலைவர் சுற்றறிக்கை
  2. இந்தியா
    ஸ்டாலின் கைது செய்யப்படுவார்: கெஜ்ரிவால் திடீர் கண்டு பிடிப்பு
  3. வீடியோ
    மூன்று வருட திமுக ஆட்சி நிறைவு | சவுக்கு சங்கர் கைது | மக்களின் மனநிலை...
  4. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்
  5. கல்வி
    ஆசிரியர் பணி கலந்தாய்வு தொடர்பாக பள்ளி கல்வி துறை இயக்குனரகம்...
  6. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  7. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  8. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்