திருச்சி ஜே.கே.நகர் விரிவாக்க பகுதியில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்

திருச்சி ஜே.கே.நகர் விரிவாக்க பகுதியில் நடந்த குடியரசு தினவிழாவில் ஐ.டி.ஐ. முதல்வர் (ஓய்வு) மன்சூர் உசேன் தேசிய கொடி ஏற்றினார்.
திருச்சி ஜே.கே.நகர் விரிவாக்க பகுதியில் இன்று குடியரசு தினவிழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
திருச்சி மாநகராட்சி மண்டலம் நான்கு 61வது வார்டில் உள்ளது ஜே.கே.நகர் விரிவாக்க பகுதி. இங்கு இன்று நாட்டின் 74வது குடியரசு தினவிழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு ஜே.கே.நகர் விரிவாக்க பகுதி மக்கள் நல சங்கத்தின் தலைவர் திருஞானம் தலைமை தாங்கினார். துணை தலைவர் பொன்சாமி வரவேற்று பேசினார்.
இந்த விழாவில் திருச்சி ஐ.டி.ஐ. முதல்வர் (ஓய்வு) மன்சூர் உசேன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். கொடி வணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நடைபெற்ற குடியரசு தின விழா விளக்க கூட்டத்திற்கு சங்க கவுரவ தலைவரும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கோட்ட பொறியாளருமான (ஓய்வு) கண்ணன் முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்வில் சங்க தலைவர் திருஞானம் ஜே.கே.நகர் விரிவாக்க பகுதியில் மாநகராட்சி சார்பில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகள், பாதாள சாக்கடை திட்ட பணிகள் எதிர்கால திட்டங்கள் பற்றி விளக்கினார். மேலும் சங்கம் எடுத்த முயற்சியின் பலனாக நமது பகுதியில் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதய ராஜ் தொகுதி மேம்பாட்டு வளர்ச்சி நிதியில் இருந்து அமைக்கப்பட உள்ள நியாயவிலைக்கடை, கடந்த மழைக்காலத்தில் நகரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகள் தண்ணீரால் சூழப்பட்டதற்கு காரணமான கொட்டப்பட்டு குளம் தூர்வாருவதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றி விரிவாக பேசினார்.
இந்த விழாவில் சங்க பொருளாளர் சாமுவேல் சதீஷ், அமைப்பு செயலாளர் எர்னஸ்ட் குலோத்துங்கன், மற்றும் ஆரோக்கியசாமி, ஓய்வு பெற்ற ரெயில்வே அதிகாரி ரங்கராஜ், புஷ்பராஜ், முத்துக்குமார், தர்மலிங்கம், அன்பரசன், சித்திக், பிரபாகரன், சத்தியசீலன், யூசுப் கரீம், மகேஸ்வரன், சங்கர் உள்பட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டது. இறுதியாக பீட்டர் நன்றி கூறினார். விழாவில் பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu