திருச்சி மலைக்கோட்டை தாயுமானசாமி கோவிலுக்கு சொந்தமான நிலம் மீட்பு
கோவில் நிலம் மீட்கப்பட்ட இடத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.
திருச்சியின் அடையாளமாக விளங்குவது மலைக்கோட்டை. பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே இயற்கையாக உருவான மலை என்ற பெருமை இம்மலைக்கோட்டைக்கு உண்டு.
உலக அதிசயங்களில் ஒன்றாக திருச்சி மலைக்கோட்டை விளங்கி வருகிறது. மலைக்கோட்டையின் உச்சியில் உச்சிப்பிள்ளையாரும், கீழ் தளத்தில் மாணிக்க விநாயகரும், நடுப்பகுதியில் அருள்மிகு தாயுமானசுவாமியும் வீற்றிருந்து அருள் பாலித்து வருகிறார்கள். இங்கு வீற்றிருக்கும் சிவபெருமான் செட்டிப்பெண்ணிற்கு தாயாக வந்து பிரசவம் பார்த்ததால் இது சுகப்பிரவ தலமாகவும் விளங்கி வருகிறது.
இத்தகைய சிறப்புக்குரிய இத்திருக்கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் ஏராளமான இடங்களில் உ ள்ளன. இந்நிலையில் திருவெறும்பூர் வட்டம், எல்லக்குடி கிராமம் சர்வே எண் 94/5A, 0.56 சென்ட் நஞ்சை நிலத்தை திருச்சிராப்பள்ளி மாவட்ட முதலாவது கூடுதல் உரிமையியல் நீதிமன்ற உத்தரவின்படி நீதிமன்ற அமினா, திருக்கோயில் உதவி ஆணையர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் முன்னிலையில் திருக்கோயில் வசம் 19.03.2024 இன்று சுவாதீனம் எடுக்கப்பட்டது.
இதுபோல் கோவிலுக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. அவற்றையும் மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் பக்தர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu