திருச்சி விடுதியில் தங்கி இருந்த ரியல் எஸ்டேட் அதிபர் மர்ம மரணம்

திருச்சி விடுதியில் தங்கி இருந்த ரியல் எஸ்டேட் அதிபர் மர்ம மரணம்
X
திருச்சியில் ரியல் எஸ்டேட் அதிபர் மர்மமான முறையில் தங்கியிருந்த அறையில் இறந்து கிடந்தார்.

வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்தவர் நித்தியானந்தம் (வயது 50), ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் திருச்சி வந்த நித்தியானந்தம் பாலக்கரை பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் மதியம் நித்தியானந்தம் தனது நண்பருடன் சாப்பிட சென்று விட்டு, மீண்டும் லாட்ஜுக்கு வந்து தனியாக படுத்தார். பின்னர் இரவு அதே நண்பர், நித்தியானந்தத்திற்கு செல்போனில் தொடர்பு கொண்ட போது அவர் போனை எடுக்க வில்லை.

இதனால் சந்ததேகம் அடைந்த அந்த நண்பர் லாட்ஜுக்கு வந்து, பார்த்த போது நித்தியானந்தம் அசைவற்ற நிலையில் கிடந்துள்ளார். தொடர்ந்து அங்கிருந்த ஆம்புலன்ஸ் மூலம் அவர் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், நித்தியானந்தம் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai healthcare technology