திருச்சி: ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் முக்கிய பிரமுகர் கைது கோரி மறியல்

திருச்சி: ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் முக்கிய பிரமுகர் கைது கோரி மறியல்
X

திருச்சி ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் முக்கிய பிரமுகரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

திருச்சி ரியல் எஸ்டேட் கொலையில் முக்கிய பிரமுகரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

திருச்சி சோமரசம்பேட்டை, மல்லியம்பத்து, செங்கதிர்சோலை பகுதியைச் சேர்ந்த சோலை சிவா என்கிற சிவகுமார் (வயது 50). அந்த ஊரில் உள்ள மயானத்தின் பொது இடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றியது தொடர்பாக, ஏற்பட்ட தகராறில்உருட்டுக்கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்டார்.

இது குறித்து சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், அவரை தாக்கிய பிரபாகரன் (வயது 34), தீபக் (28) ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில் போஸ்ட் மார்டம் செய்யப்பட்ட சிவாவின் உடலை வாங்க மறுத்து திருச்சி அரசு மருத்துவமனையின் முன்பு அவரது உறவினர்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த கொலையில் சம்பந்தப்பட்ட முக்கிய பிரமுகர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்களிடம் திருச்சி மேற்கு தாசில்தார் ரமேஷ் மற்றும் உறையூர் போலீசார் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் போலீசாரின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இந்த திடீர் மறியல் போராட்டத்தால் திருச்சி அரசு மருத்துவமனை பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!