திருச்சி சுந்தர்ராஜ் நகர் ஹைவேஸ் காலனி காவேரி நகரில் வாசிப்பு இயக்கம்

திருச்சி சுந்தர்ராஜ் நகர் ஹைவேஸ் காலனி காவேரி நகரில் வாசிப்பு இயக்கம்
X

திருச்சி சுந்தர் ராஜ் நகர் ஹைவேஸ் காலனி காவேரி நகரில் செய்தி தாள் வாசிப்பு இயக்கம் நடத்தப்பட்டது.

திருச்சி சுந்தர்ராஜ் நகர் ஹைவேஸ் காலனி காவேரி நகரில் செய்தி தாள் வாசிப்பு இயக்கம் நடத்தப்பட்டது.

மாணவர்கள் தங்கள் பொது அறிவை வளர்த்துக் கொள்ள தவறாமல் நூலகங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஐயப்பன் நகர் அரசு கிளை நூலகத்தின் நூலகர் ஷகிலா பேகம் தெரிவித்தார்.

திருச்சி சுப்பிரமணியபுரம் சுந்தர்ராஜ் நகர், ஹைவேஸ் காலனி காவேரி நகர் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பாக மாதாந்திர செய்தித்தாள் வாசிப்பு இயக்க கூட்டம் சுந்தராஜ் நகர் மாநகராட்சி பூங்காவில் இன்று திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.

இந்த கூட்டத்தை தொடங்கி வைத்து ஐயப்பன் நகர் அரசு கிளை நூலகத்தின் நூலகர் ஷகிலா பேகம் பேசும்போது கூறியதாவது:-

தமிழ்நாடு அரசு இளைஞர்களை கவர்வதற்காக நூலகங்களில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. மாவட்ட மத்திய நூலகத்தில் Science Lab, Science and Computer Hall, Internet Wifi போன்ற வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. கிளை நூலகங்களிலும் பல வசதிகள் உள்ளன.

போட்டித் தேர்வுகள் எழுதுபவர்கள் வசதிக்காக சிறப்பு வகுப்புகள் மாதிரி தேர்வுகள் அரசு நூலகங்களில் நடத்தப்படுகின்றன. இதில் பயின்ற இளைஞர்கள் பல போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று உயர் பதவியில் உள்ளனர். இளைஞர்கள் நூலகங்களில் உள்ள வசதிகளை தங்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இறுதியாக இன்றைய செய்தித்தாள்களில் பிரசுரம் ஆகி இருக்கும் செய்திகளின் அடிப்படையில் வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

சித்த மருத்துவர் திருவண்ணாமலை ஆனந்தன் விழாவில் பங்கேற்று வீட்டு முறை வைத்தியம், சத்தான உணவு பழக்க வழக்கங்கள் பற்றி சொற்பொழிவு ஆற்றினார். பின்னர் கலந்து கொண்டவர்களின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!