திருச்சியில் வேனில் 20 கிலோ ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

திருச்சியில் வேனில் 20 கிலோ ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது
X
திருச்சியில் வேனில் 20 கிலோ ரேஷன் அரிசி கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி கே.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் பொன்மலைப்பட்டி மெயின்ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமாக ஆம்னி வேன் ஒன்று வந்துகொண்டிருந்தது. அந்தவேனை போலீசார் மறித்து சோதனையிட்டனர். இதில் 20 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ரேஷன் அரிசி மற்றும் வேனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் செந்தண்ணீர் புரத்தை சேர்ந்த ராஜு, நாகமங்கலத்தை சேர்ந்த மாலிக்பாஷா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!