திருச்சி 38-வது வார்டில் வீடுகளுக்குள் மழைநீர்; எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு

திருச்சி 38-வது வார்டில் வீடுகளுக்குள் மழைநீர்; எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு
X
திருச்சியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இனிகோ இருதய ராஜ் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
திருச்சி கிழக்கு தொகுதி 38-வது வார்டில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்த பகுதியில் எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் ஆய்வு செய்தார்.

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 38 வது வார்டு கருணாநிதி நகரில் வசிக்கும் பொதுமக்கள் கனமழையின் காரணமாக வீடுகளில் தண்ணீர் புகுந்தும், தெருக்களில் மழைநீர் தேங்கியும் இருப்பதால் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையில் இருப்பதாக தொலைபேசி மற்றும் வாட்ஸ்அப் மூலமாக தொகுதி சட்டமன்ற உறுப்பினரான இனிகோ இருதயராஜுக்கு புகார் செய்தனர்.

இதனை தொடர்ந்து ஆசாத் நகர் 1, 2, 3, வது தெரு, ஐயப்ப நகர், காமராஜர் தெரு, லூர்து துரைசாமிப்பிள்ளை சாலை சோழன் சாலை, காமராஜர்நகர் நக்கீரன்தெரு, பாண்டியன் நகர் உட்பட அனைத்து இடங்களிலும் இன்று காலை கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ, இனிகோ இருதயராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தர்.

புகார் செய்யப்பட்ட பகுதிகளில் நடைபெறுகின்ற புதை வடிகால் பணிகளின் போது சாலைகளில் ஏற்படும் பள்ளங்களை தற்காலிக தீர்வாக போர்க்கால அடிப்படையில் செம்மண்கொண்டு நிறவிட வேண்டும் என்று பொன்மலை கோட்ட உதவி செயற் பொறியாளர் வேல்முருகனிடம் கேட்டுக் கொண்டார். மேலும் விரைவில் புதைவடிகால் பணிகள் நிறைவுபெற்று தார்ச் சாலைகள் அமைத்து தந்து நிரந்தர தீர்வு காணப்படும் என அந்த பகுதி மக்களுக்கு உறுதி கூறினார்.

Tags

Next Story