திருச்சி மாவட்டம் முழுவதும் பதிவான மழை அளவு

திருச்சி மாவட்டம் முழுவதும்  பதிவான மழை அளவு
X

மணப்பாறை பஸ் நிலையத்தில் இன்று  பெய்த கனமழை காரணமாக பஸ் நிலையத்தில் அதிக அளவிலான மழை தண்ணீர் உள்ளதை காணலாம்.

திருச்சி மாவட்டம் முழுவதும் பெய்த மழை விவரம் மில்லி மீட்டரில் பதிவாகி உள்ளது.

கடந்த இரண்டு மாதங்களாக தமிழகம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி மாநகரம் மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்தது. திருச்சி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விபரம் மில்லி மீட்டரில் வருமாறு-

கல்லக்குடி -13.20, லால்குடி-12.40, நந்தியாறு - 2.80, புள்ளம்பாடி -12.80, தேவிமங்கலம்-24.60, சமயபுரம்-26.20, சிறுகுடி-9, வத்தலை அணைகட்-8.40, பொன்னனியாறு அணை-8.40, முசிறி தாலுகா; முசிறி-5, புலிவலம்-5, நவலூர் குட்டப்பட்டு -10.20, துவாக்குடி-3, தென்பரநாடு-3, துறையூர்-11, பொன்மலை-4.60, திருச்சி ஏர்போர்ட் 1.20, திருச்சி ஜங்சன்-1, திருச்சி டவுன்- 1 மில்லி மீட்டர் என மொத்தமாக 170.60 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. சராசரியாக மழையின் அளவு 7.11 ஆக மழை அளவு பதிவாகி உள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!