திருச்சி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம்

திருச்சி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம்
X
திருச்சி மாவட்டத்தில், நேற்று பெய்த மழை அளவு விவரம் வெளியாகி இருக்கிறது.

மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் முழுவதும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

திருச்சி மாவட்டத்தில் பதிவான மழை அளவை, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. கல்லக்குடியில் 30.4 மி. மீட்டர், லால்குடியில் 18.2 மி.மீட்டர், நந்தியார் ஹெட் 22.6 மி.மீட்டர், புள்ளம்பாடியில் 8.2 மி.மீட்டர், சமயபுரம் 16.2 மி.மீட்டர், கோவில்பட்டி 40.20 மி.மீட்டர், வாத்தலை அணைக்கட்டு 62.2 மி.மீட்டர், பொன்னையார் டேம் 55 மி.மீட்டர் மழை பதிவானது.

அதேபோல், மருங்காபுரி 12.2 மி.மீட்டர், புலிவலம் 40 மி.மீட்டர், நவலூர் குட்டப்பட்டு 26.2 மி.மீட்டர், துவாக்குடி ஐஎம்டிஐ 3 மி.மீட்டர், கொப்பம்பட்டி 2 மி.மீட்டர், தேன்பரநாடு 13 மி.மீட்டர், துறையூர் 21 மி.மீட்டர், பொன்மலை 29.2 மி.மீட்டர், திருச்சி விமான நிலையம் 7.4 மி.மீட்டர், திருச்சி ஜங்ஷன் 33 மி.மீட்டர், திருச்சி டவுன் 43.10 மி.மீட்டர் ஆகிய அளவுகளில் மழை பெய்து உள்ளதாக தெரிவித்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் மொத்தத்தில் 694.5 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. சராசரியாக 28.94 ஆக மழையின் அளவு பதிவாகியுள்ளது. திருச்சி மணப்பாறையில் 113.4 மில்லி மீட்டர் அதிக அளவு மழை பெய்து உள்ளது. அடுத்ததாக முசிறியில் 98 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself