ஆயுத பூஜை நாளில் சக நண்பருக்கு பண உதவி செய்த ரயில்வே பணிமனை தொழிலாளர்கள்
சக தொழிலாளிக்கு பண உதவி செய்த ரயில்வே பணிமனை தொழிலாளர்கள்.
ஆயுதபூஜையில் தனக்கு வேலை செய்யும் ஆயுதத்திற்கு பாதி , தன்னுடன் பணிபுரியும் நண்பருக்கு பாதி என ரயில்வே தொழிலாளர்கள் கொண்டாடி உள்ளனர்.
ஆயுதபூஜையின் போது சாமி கும்பிட்ட மற்றும் வீட்டிற்கு பொருள்கள் வாங்க என்று பணம் வசூல் செய்வது வழக்கம்.ஆனால் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் டீசல் பிரிவில் Pumps & Blowers என்ற பகுதியில் சாமி பூஜை செய்ய பணம் போக மீதி பணத்தை தனது வீட்டிற்கு பொருட்கள் வாங்காமல் தன்னுடன் பணிபுரியும் நண்பருக்கு தானமாக கொடுத்து விட்டார்கள்.
ஆர்.சீனிவாசன் (வயது45) என்ற ரயில்வே தொழிலாளி விபத்தில் காயமுற்று கிட்டதட்ட 8 மாதமாக பொன்மலை ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இவருக்கு லீவு இல்லை, ஆகையால் சம்பளம் இல்லை. வந்த போனஸ் தொகையையும் வங்கி எடுத்துக் கொண்டது.
தன் குடும்பம் , தன் சுகம் என்ற சுயநலம் இல்லாமல் தன்னுடன் பணிபுரியும் சக தொழிலாளியின் குடும்பம் கஷ்டத்தை உணர்ந்து ஆயுதபூஜை சாமி கும்பிட தேவையான பொருட்களை மட்டும் வாங்கிக் கொண்டு ஆயுதபூஜை நடத்தி விட்டு மீதம் இருந்த (10400 ரூபாய் ) பணத்தை சீனிவாசன் மனைவியிடம் கொடுத்தார்கள்.
நட்பு என்பது துன்பங்களை துடைப்பதாக இருக்க வேண்டும். நண்பர்கள் உதவி கேட்க தயங்கி நிற்பார்கள். அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவர்களிடம் கேட்காமலே அவர்களுடைய துன்பங்களுக்கு ஆறுதலாக இருக்க வேண்டும் என எடுத்துகாட்டாக விளங்கி பொன்மலை ரயில்வே டீசல் பிரிவு மார்டின், பத்மநாபன், திருமுருகன், செல்வராஜ், கே.சி. நீலமேகம், பெரியசாமி, சேதுராமன், செந்தில், உதயகுமார், ஐஸ்டின் ராஜா, நளினி, காளியப்பன் , உலகநாதன், ஸ்ரீவசன், மற்றும் டீசல் பிரிவு தொழிலாளிகளை சக நண்பர்கள் பாராட்டி உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu