பிரதமரின் வீடு கட்டும் திட்ட வழிமுறைகள் பற்றிய கையேடு வெளியீடு

பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டப் பயனாளிகள் திட்டம் தொடர்பாக வீடு கட்டும் பணியின் நிலைகளுக்குரிய நிதியுதவிகளை பெறுதல், இரும்பு கம்பி,சிமெண்ட் போன்ற கட்டுமானப் பொருட்களை பெறுதல் போன்ற விவரங்களை அறிந்து கொள்ளும் பொருட்டு அனைத்து பயனாளிகளுக்கும் பிரதம மந்திரி குடியிருப்பு திட்ட சிற்றேடுகள் வழங்கும் பணியானது திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமாரால் துவக்கி வைக்கப்பட்டது.
மேலும் ஊரக வளர்ச்சித் துறையில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்கள் தொடர்பாக மாநில அளவிலான பொது மக்கள் குறை தீர்க்கும் மையம் அமைக்கப்பட்டு அதற்கான தொலைபேசி எண்கள் 89254-22215 மற்றும் 89254-22216. சுவரொட்டிகள் மூலம் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராம ஊராட்சி மற்றும் குக்கிராமங்களில் உள்ள அரசு கட்டிடங்களில் ஒட்டப்பட்டு விளம்பரப்படுத்தப் பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu