திருச்சி மாநகரில் பொதுமக்களின் நலன்கருதி போக்குவரத்து மாற்றம்

திருச்சி மாநகரில் பொதுமக்களின் நலன்கருதி போக்குவரத்து மாற்றம்
X

காவல் ஆளினர் ஒருவருக்கு மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் உதவி தொகை வழங்கினார்.

திருச்சி மாநகரில் பொதுமக்களின் நலன்கருதி போக்குவரத்து மாற்றம்.

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக ஜி.கார்த்திகேயன் பொறுப்பேற்றதில் இருந்து திருச்சி மாநகரத்தில் பொதுமக்கள் நலன்கருதியும், வாகன ஓட்டிகள் வசதிகேற்ப சாலை போக்குவரத்தில் பல மாறுதல்கள் செய்தும், விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.

கடந்த 5 வருடங்களாக கரூர் பைபாஸ் சாலை, சாஸ்திரிரோடு வழியாக மத்திய பஸ் நிலையம் வரும் புறநகர் பேருந்துகள் அனைத்தும் தென்னூர் உக்கிரகாளியம்மன் கோயில் அண்ணாநகர், எம்.ஜி.ஆர். சிலை, நீதிமன்றம், வ.உ.சி சிலை, மாநகர காவல் கட்டுப்பாட்டு அறை, ரெனால்ட்ஸ் ரோடு வழியாக மத்திய பஸ் நிலையத்திற்கு சுற்றி சென்று கொண்டிருக்கின்றன.

போலீஸ் கமிஷனர் நேற்று போக்குவரத்து சீரமைப்பு சம்பந்தமாக எம்.ஜி.ஆர் சிலை அருகே போக்குவரத்து வழித்தடத்தை பார்வையிட்டு,நீதிமன்றம் வழியாக சுற்றி சென்று கொண்டிருந்த புறநகர் பேருந்துகள் மற்றும் வாகனங்களை, எம்ஜிஆர் சிலை ரவுண்டானா, ஐயப்பன்கோயில், லாசன்ஸ் ரோடு, வெஸ்டரி பள்ளி ரவுண்டானா வழியாக நேரடியாக மத்திய பஸ் நிலையம் சென்றடைய பொதுமக்கள் நலன்கருதி போக்குவரத்து வழித்தடம் மாற்றம் செய்து ஆணையிட்டார். மேற்கண்ட போக்குவரத்து வழித்தடம் மாற்றத்திற்கு பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் மறுபடியும் 21.12.21-ந் தேதி (இன்று) எம்ஜிஆர் சிலை ரவுண்டானா சென்று சீர்செய்யப்பட்ட போக்குவரத்து மாற்றத்தில் புறநகர்பேருந்துகள் மற்றும் வாகனங்கள் சரியாக செல்கின்றவா, ஏதேனும்போக்குவரத்து குறைபாடுகள்உள்ளனவா என ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் போலீஸ் கமிஷனர் அலுவகத்தில் காவல்துறையில் பணிபுரியும் காவல் ஆளிநர்களின் குழந்தைகள் 11நபர்களுக்கு கல்வி உதவி தொகையும், 43 காவல் ஆளிநர்களின் குடும்பங்களுக்கு இறுதிசடங்கு உதவி தொகையும் வழங்கினார். மேலும் போலீஸ் கமிஷனர் காவலரின் குடும்பங்களுக்கிடையே பேசுகையில், "எல்லா குழந்தைகளும் நன்றாக படிக்க வேண்டும் எனவும், கடமையும் முக்கியம், குடும்பமும் முக்கியம் எனவும், கடமையும் குடும்பமும் இருகண்களாக பார்க்க வேண்டும்" எனவும் அறிவுரை வழங்கினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!