திருச்சியில் பொது வேலை நிறுத்த போராட்ட விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம்

திருச்சியில் பொது வேலை நிறுத்த போராட்ட விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம்
X

திருச்சியில் நடைபெற்ற தெருமுனை பிரச்சார  கூட்டத்தில் க. சுரேஷ் பேசினார்.

திருச்சியில் பொது வேலை நிறுத்த போராட்ட விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.

பிப்ரவரி 16 பொது வேலை நிறுத்த போராட்டத்தை விளக்கி திருச்சியில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.

வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், குறைந்தபட்ச மாத ஊதியம் 26 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் ,நான்கு சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 13அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தமிழகத்தில் பிப்ரவரி 16ம் தேதி பொது வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது.

இது தொடர்பான தெருமுனை பிரச்சார கூட்டங்கள் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாயிகள் ஐக்கிய முன்னனி சார்பில் பிப்ரவரி 1 மாலை 6 மணி அளவில் திருச்சி ஆண்டாள் தெருவில் நடைபெற்றது. இந்த பிரச்சார கூட்டத்திற்கு சிஐடியு மாநகர தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.

தொமுச தொழிற்சங்க செயலாளர் ஜோசப் நெல்சன் ,ராமலிங்கம், ஏஐடியுசி சார்பில் பொதுச் செயலாளர் சுரேஷ்,சிவா சிஐடியு சார்பில்பொதுச் செயலாளர் ரங்கராஜன், எச்எம்எஸ் சார்பில் ஜான்சன், ஐஎன்டியுசி சார்பில் சாய்நாதன் , ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் சம்சுதீன் ஆகியோர் உரையாற்றினர்இறுதியாக .சிஐடியு மணிகண்டன் நன்றி கூறினார் .இந்த பிரச்சாரக் கூட்டம் மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் வருகிற பிப்ரவரி 15ம் தேதி வரை நடைபெற உள்ளன. பிப்ரவரி16ஆம் தேதி முழு வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story