திருச்சி பொன்மலைப்பட்டி வஉசி சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

திருச்சி பொன்மலைப்பட்டி வஉசி சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
X
மோசமான நிலையில் உள்ள சாலை.
திருச்சி பொன்மலைப்பட்டி வஉசி சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருச்சி பொன்மலைப்பட்டியில் பஸ்கள் செல்லும் மெயின் ரோடாக வ.உ.சி சாலை உள்ளது. இந்த சாலையில் பாதாள சாக்கடைத் திட்டம் முடிந்து பல மாதம் ஆகியும் ஆகி வி்ட்டது. ஆனாலும் இங்கு இன்னும் சாலை அமைக்கப்படவில்லை.

இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. இவ்வாறான சாலைகளின் வளைவுகளில் இருசக்கரவாகனங்களில் திரும்பும்போது தடுமாற்றத்தை பெரும்பாலான வாகன ஒட்டிகள் சந்திக்கிறார்கள்.

பாதாள சாக்கடை திட்ட பணிகள் முழுதும் முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்டதால் மக்கள் கடும் சிரமங்களை அனுபவித்து வருகிறார்கள். இன்னும் சில வாரங்களில் மழை காலம் ஆரம்பிக்கும் முன் இந்த சாலையை வாகனங்கள் செல்லும் வகையில் சீரமைக்க வேண்டும் என மக்கள் சக்தி இயக்கம் மற்றும் பொது மக்கள் திருச்சி மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
ai in future agriculture