திருச்சியில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சியில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
X

திருச்சியில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Protest News - திருச்சி பாலக்கரையில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Protest News -2002 குஜராத் இனப்படுகொலையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பல்கீஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுதலை கண்டித்து ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி மண்டல தலைவர் மெளலானா அப்துல் கஃபூர் மன்பயீ தலைமையில் திருச்சி பாலக்கரையில் நடைபெற்றது.

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மாநில செயலாளர் மெளலானா அப்துல்லாஹ் ஸஆதி தொகுத்து வழங்கினார். ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மாநில செயற்குழு உறுப்பினர் மெளலானா அப்துல் காதிர் ஜைனி கண்டன கோஷத்தை எழுப்பினார்.

அதனைத் தொடர்ந்து ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மாநில பொதுச்செயலாளர் மெளலானா அர்ஷத் அஹ்மது அல்தாஃபி, பாப்புலர் ஃப்ரண்டின் திருச்சி மாவட்ட தலைவர் ஷஃபியுல்லாஹ், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் திருச்சி மண்டல தலைவர் இமாம் ஹஸ்ஸான் ஃபைஜி ஆகியோர் கண்டன உரையை நிகழ்த்தினார்கள். இதில் இமாம்கள் மற்றும் ஜமாத்தார்கள் பொதுமக்கள் என அதிகளவில் மக்கள் கலந்து கொண்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்தார்கள். இறுதியாக மெளலானா ஷேக் ஸஆதி நன்றியுரை நிகழ்த்தினார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு