திருச்சியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
Protest News -இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான மு. வீரபாண்டியன் சென்னை வியாசர்பாடியில் அவரது இல்லத்தில் இருந்து புறப்பட்டபோது கஞ்சா போதையில் இருந்த கும்பல் போவோர் வருவோரை கத்தியை காட்டி மிரட்டி தகராறில் ஈடுபட்டனர். இதனை தட்டிக் கேட்ட போது அவரையும் தாக்கியதில் சமயோசிதமாக கும்பலின் கொலை வெறி தாக்குதலில் இருந்து பொதுமக்கள் உதவியுடன் அவர் காப்பாற்றப்பட்டார்.
வீரபாண்டியன் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட குழுவின் சார்பில் உறையூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு பகுதி செயலாளர் சுரேஷ் முத்துசாமி தலைமை ஏற்றார்
கண்டன உரையாக மாநகர் மாவட்ட செயலாளர் சிவா, திருச்சி மாவட்ட ஏ. ஐ. டி. யு. சி. பொதுச் செயலாளர் க. சுரேஷ், மாநில நிர்வாக குழு முன்னாள் உறுப்பினர் செல்வராஜ், தரைக்கடை சங்க செயலாளர் அன்சர் தீன், மாதர் சம்மேளன தலைவர் ஆயிஷா, மாணவர் பெருமன்ற செயலாளர் இப்ராஹிம், இளைஞர் பெருமன்ற செயலாளர் செல்வகுமார், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க சூர்யா, ஆட்டோ சங்கம் சத்யா, பகுதி செயலாளர்கள் ராஜலிங்கம், அபுதாகிர் மாதர் சம்மேளன நிர்வாகிகள் புஷ்பம், நிர்மலா மற்றும் பாட்ஷா, ஏர்போர்ட் ராஜா, ரவீந்திரன், ஆனந்தன், துரைராஜ் உள்பட நூறு பேர் பங்கேற்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu