திருச்சியில் கல்லூரி பேராசிரியரை கடத்தி பணம் பறித்த 3 பேர் கைது

திருச்சியில் கல்லூரி பேராசிரியரை கடத்தி பணம் பறித்த  3 பேர் கைது
X
திருச்சியில் கல்லூரி பேராசிரியரை கடத்தி பணம் கேட்டு மிரட்டியதாக 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி கருமண்டபம் வசந்த் நகரை சேர்ந்தவர் விமல் ஆதித்யன். இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லுாரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

இவருடன் கல்லூரியில் வேலை பார்த்து வரும் நிவேதிதா என்ற பெண்ணுடன், தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நிவேதிதாவிற்கு, பேராசிரியர் விமல் ஆதித்யனே வரன் தேடி உள்ளார். இதில் சசிகுமார் என்பவரை நிச்சயம் செய்து திருமணம் செய்து வைத்துள்ளார்.

அதன் பின்னரும் இருவருக்கும் தொடர்பு இருந்து வந்துள்ளது.இந்நிலையில் இருவருக்கும் உள்ள தொடர்பு கணவர் சசிகுமாருக்கு தெரிய வந்துள்ளது. இதனால் விமல் ஆதித்யன் மீது ஆத்திரம் அடைந்த சசிகுமார், அவரை கடத்தி சென்று பணம் கேட்டு மிரட்டி உள்ளார்.

இதில் ரூ.2 லட்சம் கை மாறிய போதும் இது போதாது இன்னும் வேண்டும் என்று கேட்டு பேராசிரியரை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் பேராசிரியரின் மனைவி ரூ.40 ஆயிரம் மற்றும் சொத்து பத்திரங்களை கொண்டு சென்று சசிகுமாரிடம் கொடுத்து, கணவரை மீட்டுக்கொண்டு நேராக திருச்சி செசன்ஸ் கோர்ட் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளார்.

இது குறித்து விமல் ஆதித்யன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சசிகுமார், அவரது தம்பி பிரசாந்த், லாசர் ஆரோக்கியராஜ் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!