மழை வெள்ளத்தால் தமிழகத்தில் உற்பத்தி திறன் பாதிப்பு: அண்ணாமலை பேட்டி
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை.
திருச்சி விமான நிலையத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் உற்பத்தி திறன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்கள் உற்பத்தி திறனை இழந்துள்ளன.
தூத்துக்குடியில் உப்பளங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. மழை வெள்ளத்தால் தமிழக அரசுக்குபடிப்பினை இல்லை. மத்திய அரசை குறை சொல்ல தமிழக அரசு முனைப்பு காட்டுகிறது.
தூத்துக்குடியில் வெள்ள பாதிப்பை சீரமைப்பதற்கு மாநில அரசு சரியான நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை. தமிழக முதல்வரும், அமைச்சர்களும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வருவதற்கு முன்பாகவே மத்திய அரசின் பேரிடர் மீட்பு குழுவினர் முழு அளவில் மீட்பு பணிகளை செய்தனர்.
தமிழக அரசை பொறுத்தவரை மீட்பு பணிகளில் கவனம் செலுத்துவதை விட்டு விட்டு மத்திய அரசின் மீது குறை கூறுவதிலேயே குறியாக இருந்தார்கள். இப்போது வரை அதனை தான் செய்து கொண்டு இருக்கிறார்கள். இதனை பாதிக்கப்பட்ட மக்களே தெரிவித்து இருக்கிறார்கள்.
இவ்வாறு பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu