திருச்சியில் ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு

திருச்சியில் ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு
X

திருச்சியில் ஓவிய போட்டியில் பரிசு பெற்ற மாணவ மாணவிகளுடன் கலெக்டர் சிவராசு உள்ளார்.

திருச்சியில் ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கலெக்டர் சிவராசு பரிசு வழங்கினார்.

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், தீராக்காதல் திருக்குறள் என்ற பெயரில் தீந்தமிழ் நிகழ்ச்சிகளைத் தமிழ் இணையக் கல்வி கழகம் சார்பில் மாநில அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கென குறளோவியம் என்ற பெயரில் ஓவியப் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் சிறந்த 365 ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டு போட்டியில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களைப் பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரால் பரிசுகள் வழங்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, திருச்சி மாவட்டத்தில், இப்போட்டிகளில் சிறப்புப் பரிசு பெற்ற சிறுகனூர்அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு பயிலும் மாணவர் கா.சதீஷ், திருச்சி ஜே.ஜே.பொறியியல் கல்லூரியில் பயிலும் அ.ஷாம் ஸ்டீபன் ஆகிய இரண்டு மாணவர்களுக்கு சிறப்புப் பரிசாக ரூ.5,000க்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும்,

மேலும், இலால்குடி எல்.என்.பி.பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவி வி.ரோகிணி மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவி ரா.லட்சுமி பிரியா, சோபனபுரம் அரசு உயா;நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு பயிலும் மாணவி ச.பாமா, துறையூர் விமலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் மாணவி வ.குபேரலெட்சுமி, திருச்சி ஏ.கே.கே.வி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர் அ.முகமத் ஹாமீத், மண்ணச்சநல்லூர் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவி தி.பாரிஷா, செவல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர் பி.கருப்பையா, சமயபுரம் ஏஸ்.ஆர்.வி.பப்ளிக் பள்ளியில் பயிலும் மாணவர் ச.சச்சுதன், கருங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவி கி.சரண்யா உள்ளிட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கும்,

மேலும், திருச்சி ஜமால் முகமது கல்லூரி மாணவி உ.ரம்ஜான் பீ, திருச்சி தேசியக் கல்லூரி மாணவி ஜே.அர்ச்சனா, மாணவர் கோ.க.ஹாரிஹரன், திருச்சி பெரியார் ஈ.வே.ரா.கல்லூரி மாணவர் ஏ.சதீஷ், திருச்சி எஸ்.ஆர்.எம்.நர்சிங் கல்லூரி மாணவி எம்.பாஸ்டினாள், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி மாணவி இரா.பிரீத்தி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரி மாணவி இரா.காயத்ரி உள்ளிட்ட கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் என மொத்தம் 16 பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஊக்கப் பரிசாக ரூ.1,000க்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் என மொத்தம் 18 மாணவ, மாணவிகளுக்கு காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு வழங்கிப் பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் பழனிகுமார் தனித்துணை ஆட்சியர்( சமூக பாதுகாப்புத் திட்டம் )அம்பிகாபதி, செய்தி மக்கள் தொடர்புத் துறை உதவி இயக்குனர் செந்தில்குமார் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் சுதாகர் உள்ட பலர் கலந்து கொண்டனர்.


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!