பேச்சு போட்டியில் வென்ற திருச்சி அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு

உலக பூமி தினத்தையொட்டி நடந்த பேச்சுபோட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
திருச்சி மிளகு பாறையில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியில் உலக பூமி தினம் கொண்டாடப்பட்டது. உலக பூமி தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் குறித்து பேச்சு போட்டி, கவிதை போட்டிகள் நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு முதல் பரிசு இரண்டாம் பரிசு மற்றும் மூன்றாம் பரிசு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பசுமை அறக்கட்டளை தலைவர் ஆர்.முத்துசெல்வி வரவேற்புரையாற்றினார். ஆதிதிராவிடர் அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் பி.வளர்மதி தலைமையுரையாற்றினார். சாதனை அறக்கட்டளை அமைப்பின் நிர்வாகி எஸ்.அமுதா, வார்டு அறக்கட்டளை நிர்வாகி ஆர்.மாணிக்கவள்ளி ,வி. ஆர்.எம். எம்.பாலகிருஷ்ணன் பீஸ் அறக்கட்டளை நிர்வாகி பி. கனகவேல் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக திருச்சி மாவட்ட வனசரக அலுவலர் கோபிநாத் கலந்து கொண்டு மாணவ மாணவிகளிடம் மேற்கு தொடர்ச்சி மலையின் முகியத்துவத்தை பற்றியும் காவேரி ஆற்றின் முக்கியத்துவத்தை குறித்தும் விளக்கி பேசி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
நிகழ்வில் அகில இந்திய மக்கள் உரிமை மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான ஆர்.ஏ.தாமஸ் அவர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகள் இயற்கையை எப்படி நேசிக்க வேண்டும் அதை மாசு படுத்தாமல் எப்படி பாதுகாக்க வேண்டும் நம்மால் இயன்ற வரை ஒரு மரகன்றையாவது நட்டு வளர்க்க வேண்டும் நமது இலக்கை அடையகடினமாக உழைக்க வேண்டும் என்று மாணவ மாணவிகளிடம் எடுத்து கூறினார்.
நிகழ்வில் ஆதிதிராவிடர் அரசு பள்ளியின் தமிழ் ஆசிரியர் எம். எட்வர்ட் பாஸ்கர், பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்.சின்னையா, எம்.சந்திரசேகர் கவிதா மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்வின் முடிவில் முதுகலை பட்டதாரி ஆசிரியை கே. பால் ஜான்சி நன்றியுரையாற்றினார். நிகழ்வின் முடிவில் மாணவ மாணவிகளுக்கு துளசி செடி வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu