திருச்சியில் நவம்பர் 4-ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள வேலைநாடுநர்களை தனியார் துறைகளில் பணியமர்த்தும் நோக்கத்தோடு, திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 04.11.2023 சனிக்கிழமை அன்று திருச்சிராப்பள்ளி, சமயபுரம் டோல்பிளாசா அருகில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நடைபெறவுள்ளது.
இம்முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத்துறை போன்ற பல்வேறு தனியார்துறைகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர்.
மேலும், இம்மாவட்டத்திலுள்ள திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களை தோ;வு செய்யவுள்ளனர்.
இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 10ம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, செவிலியர் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள் மற்றும் பொறியியல் பட்டப்படிப்புகள் போன்ற கல்வித்தகுதிகளையுடைய 18 வயது முதல் 40 வயதிற்குட்பட்ட வேலைநாடுநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சுய விவரக்குறிப்பு அனைத்து கல்விச்சான்றுகளின் நகல்கள், ஆதார்அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், தனியார்துறையில் வேலைவாய்ப்பு பெற விரும்பும் வேலைநாடுநர்கள், தமிழ்நாடு அரசின் https://.www./tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்தும் பயன்பெறலாம்.
இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில், ஒரே இடத்தில் பல்வேறு தனியார் நிறுவனங்களின் நேர்காணலில் கலந்து கொண்டு, வேலைநாடுநர்கள் தாங்கள் விரும்பும் வேலைவாய்ப்பினை பெற இது ஒரு நல்ல வாய்ப்பு என்பதால், திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைநாடுநர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu