திருச்சியில் வருகிற 19-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருச்சியில் வருகிற 19-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
X

திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு.

திருச்சியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 19-ஆம் தேதி நடக்கிறது.

திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி வளாகத்தில், வரும் 19-ஆம் தேதி காலை 8 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இதில் தொழில்துறை, சேவைத் துறை, விற்பனைத்துறை போன்ற பல்வேறு தனியார் துறைகளை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் தகுதியுள்ள நபர்களை பணிக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர். மேலும், மாவட் டத்திலுள்ள திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர்.

முகாமில் 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு தேர்ச்சி, தோல்வி, 12-ஆம் வகுப்பு, ஐடிஐ, செவிலியர், இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரிகள் மற்றும் பொறியியல் படிப் புகள் போன்ற கல்வித்தகுதிகளையுடைய 18 வயது முதல் 40 வயதிற்குட்பட்ட வேலை நாடுநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சுய விவரக்குறிப்பு, அனைத்து கல்விச்சான்றுகளின் நகல்கள், ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்று கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!