திருச்சியில் தனியார் நிறுவனம் பண மோசடி: பொதுமக்கள் சாலை மறியல்

திருச்சியில் தனியார் நிறுவனம் பண மோசடி: பொதுமக்கள் சாலை மறியல்
X

திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் எம்ஜிஆர் சிலை அருகே தனியார் நிறுவனத்திற்கு எதிராக பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

திருச்சியில், தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்த பணம் மோசடி; நடவடிக்கை கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்.

திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் எல்பின் என்ற ஒரு தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தின் மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள் கொடுக்கப்பட்டு முதலீடு செய்த பணத்தை திருப்பித் தரவில்லை எனக் கூறி ஏராளமானோர் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் கோர்ட் அருகே எம்ஜிஆர் சிலை அருகே இன்று சுமார் 300-க்கும் மேற்பட்டோர் திடீரென ஒன்று கூடினர்.

பின்னர் அனைவரும் ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்ற அந்த ரோட்டில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது எல்பின் நிறுவனத்தில் பல கோடி பணத்தை முதலீடு செய்துள்ளதாகவும், ரியல் எஸ்டேட் என்ற பெயரில் அந்த நிறுவனம் நிலங்களை வாங்கி உள்ளதாகவும், அதன் மூலம் நாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்றும் கூறினர். இது குறித்து எந்தவித அறிவிப்பும் அந்த நிறுவனம் ஐங்களுக்கு தரவில்லை. தங்களது பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று பாதிக்கப்பட்ட பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அந்த எல்பின் நிறுவனத்தின் தலைவர் ராஜா மற்றும் ரமேஷ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து தங்களது பணத்தை மீட்டுத் தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதை தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அனைவரும் அவரவர்கள் சாரபில் மனு எழுதி கொடுத்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பாக இருந்தது.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு