திருச்சி மரக்கடை ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்

திருச்சி மரக்கடை  ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்
X

திருச்சி மரக்கடை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

திருச்சி மரக்கடை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

திருச்சி மரக்கடை 12-வது வார்டில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த ஓராண்டாக நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கப்படுவது இல்லை. இதனால் அப்பகுதியினர் கடும் அவதி அடைந்து வந்தனர். எனவே, மீண்டும் மரக்கடை பகுதியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே மருத்துவம் பார்க்க ஏற்பாடு செய்திட வேண்டும்.

போதிய டாக்டர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் மற்றும் உரிய மருந்துகள், படுக்கை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என வலியுறுத்தி பொதுமக்களோடு இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வள்ளுவர்நகர் பகுதி கிளை சார்பில் மரக்கடை ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மலைக்கோட்டை பகுதி குழு நிர்வாகி பஷீர் அகமது தலைமை தாங்கினார்.

தகவலறிந்த மாநகராட்சி மருத்துவ அதிகாரி, சுகாதார ஆய்வாளர், மாநகராட்சி உதவி ஆணையர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மரக்கடை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே இனி மருத்துவம் பார்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!