திருச்சி மாவட்ட புதிய ஆட்சியராக மா. பிரதீப் குமார் இன்று பதவி ஏற்பு
திருச்சி மாவட்ட புதிய ஆட்சியர் மா. பிரதீப்குமார்.
திருச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த எஸ். சிவராசு கோவை வணிகவரி இணை ஆணையராக மாற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்ட புதிய ஆட்சியராக மா.பிரதீப்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.புதிய ஆட்சியர் பிரதீப் குமார் நேரடியாக ஐ.ஏ.எஸ். பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர் ஆவார். சென்னையை பூர்வீகமாகக் கொண்ட இவர் தூத்துக்குடி, கும்பகோணம் ஆகிய நகரங்களில் உதவி கலெக்டராகவும், அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கூடுதல் மாவட்ட ஆட்சியராகவும் பணியாற்றியுள்ளார்.
பிரதீப் குமார் இன்று திருச்சி மாவட்டத்தின் 145வது ஆட்சியராக பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்பு நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர் கலெக்டர் பிரதீப்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது
பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க கூடுதல் கவனம் செலுத்துவேன். திருச்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் மிகவும் தாமதமாக நடப்பதாக புகார்கள் வந்துள்ளன. அதனை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பேன். மேலும் அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட தமிழக அரசின் திட்டங்கள் அனைத்தையும் திருச்சி மாவட்டத்தில் விரைவாக முடித்து மக்களுக்கு அதன் பயன் சென்றடைய நடவடிக்கை எடுப்பேன். மேலும் பட்டா மாறுதல், புதிய பட்டா வழங்குதல் சப் டிவிஷன் செய்தல் போன்ற பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து எனது பணிகளை செய்வேன் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu