பிரபாகரன் பிறந்த நாள்: திருச்சி அரசு மருத்துவமனையில் மதிய உணவு வினியோகம்

பிரபாகரன் பிறந்த நாள்: திருச்சி அரசு மருத்துவமனையில் மதிய உணவு வினியோகம்
X
விடுதலைப்புலிகள் இயக்க  தலைவர் பிரபாகரன் பிறந்தநாளையொட்டி திருச்சி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது.
பிரபாகரன் பிறந்த நாளையொட்டி திருச்சி அரசு மருத்துவமனையில் நாம் தமிழர் கட்சியினர் நோயாளிகளுக்கு மதிய உணவு வழங்கினர்.

தமிழ் ஈழத்திற்காக ஆயுதப்போராட்டம் நடத்திய எல்.டி.டி.இ. தலைவர் பிரபாகரனின் 67வது பிறந்த நாள் விழா திருச்சி மாநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதனையொட்டி திருச்சி அரசு மருத்துவமனையில் நாம் தமிழர் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பிரபு தலைமையில் 60பேர் ரத்த தானம் செய்தனர். மேலும் நோயாளிகளுக்கு மதிய உணவும் இலவசமாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!