தென்னூர், சிறுகமணி பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை

தென்னூர், சிறுகமணி பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை
X

பைல் படம்.

மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக தென்னூர், சிறுகமணி பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி சிறுகமணி துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதையொட்டி சிறுகமணி, காமநாயக்கன்பாளையம், திருவள்ளுவர் நகர், காவல்காரன் பாளையம், திருச்செந்தூரை மெயின் ரோடு, பழூர் மெயின் ரோடு, பெருகமணி, திருப்பராய்த்துறை, ஜீயபுரம் மெயின் ரோடு, முக்கொம்பு, திண்டுக்கரை, கொடியாலயம், அணலை, அல்லூர் ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

இதே போல் திருச்சி நகரியம் கோட்டம், உறையூர் பிரிவிற்குட்பட்ட மங்கள் நகர், அகிலாண்டேஸ்வரி நகர், எஸ்.பி.ஐ. காலனி, அரவானூர், மருதாண்டாக்குறிச்சி, சந்தோஷ்நகர், ஆளவந்தான் நகர், ராமநாதநல்லூர், சீராத்தோப்பு, சாத்தனூர், அமிர்தராஜநல்லூர். தென்னூர் பிரிவிற்குட்பட்ட தென்னூர் ஹைரோடு, கே.எம்.சி. மருத்துவமனை முதல் புத்தூர் நால்ரோடு வரை, மகாலட்சுமிநகர் பிரிவிற்குட்பட்ட காயிதே மில்லத் நகர் முதல் இந்து பதிப்பகம் வரை ஆகிய பகுதிகளில் உயர் அழுத்த மின்பாதை பராமரிப்பு மேற்கொள்ளப்பட இருப்பதால் நாளை மறுநாள் காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவல் மின்வாரிய அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!