திருச்சி கே.கே.நகர் பகுதியில் நாளை (நவ.22) மின்சாரம் நிறுத்தம்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம் கழகத்தின் திருச்சி மன்னார்புரம் பெருநகர் செயற்பொறியாளர் முத்துராமன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கே.சாத்தனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை(22-ந்தேதி)புதன்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை, கே.கே.நகர்.இந்தியன் பேங்க் காலனி, காஜாமலை காலனி, எஸ்.எம்.இ.எஸ்.இ. காலனி, கிருஷ்ணமூர்த்தி நகர், சுந்தர்நகர், ஐயப்பநகர், எல்.ஐ.சி. காலனி, பழனிநகர், முல்லை நகர், ஓலையூர், இச்சிகாமாலைப்பட்டி, மன்னார்புரம் ஒருபகுதி, சிம்கோ காலனி, ஆர்.வி.எஸ்.நகர், வயர்லஸ்ரோடு,செம்பட்டு பகுதி, குடித்தெரு, பாரதிநகர், காமராஜ்நகர், ஜே.கே.நகர், சந்தோஷ் நகர், ஆனந்த் நகர், கே.சாத்தனூர், வடுகப்பட்டி,பாரிநகர், காஜாநகர், ஆர்.எஸ்.புரம், டி.எஸ்.என்.அவென்யூ ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மேற்கண்ட பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுவதால் இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதற்கு தகுந்தாற்போல் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளும்படி மின்வாரிய அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu