பராமரிப்பு பணிக்காக திருச்சி மாநகர் பகுதிகளில் நாளை மின் வினியோகம் நிறுத்தம்

பராமரிப்பு பணிக்காக திருச்சி மாநகர் பகுதிகளில் நாளை மின் வினியோகம் நிறுத்தம்
X
பராமரிப்பு பணியின் காரணமாக நாளை திருச்சி மாநகரில் மின் வினியோகம் இருக்காது.

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட சில பகுதிகளில், மாதாந்திர பராமரிப்புக்காக நாளை புதன்கிழமை மின் விநியோகம் இருக்காது.

இது குறித்து தமிழ்நாடு மின்வாரிய திருச்சி, தென்னூர் செயற்பொறியாளர் ச.பிரகாசம் தெரிவித்திருப்பது, திருச்சி நீதிமன்ற வளாகம் அருகே அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் புதன்கிழமை மேற்கொள்ளப்படுகிறது.

இதனால், இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் மாநகராட்சி பகுதிகளான வார்னர்ஸ் சாலை, பாரதிதாசன் சாலை, லாசன் சாலை, ரெனால்ட்ஸ் சாலை, கண்டோன்மென்ட் பகுதிகள், பீமநகர், ஹீபர் சாலை, கூனிபஜார், புதுத்தெரு, கண்டித்தெரு, மார்சிங் பேட்டை, வாலாஜா பஜார், வயலூர் சாலை, புத்தூர், வண்ணாரப்பேட்டை, அரசு மருத்துவமனை, ஆபிஸர்ஸ் காலனி, பாரதி நகர், பிஷப்ஹீபர் கல்லூரி பகுதிகள், குமரன் நகர், தென்னூர் உழவர் சந்தை ஆகிய பகுதிகளுக்கு நவம்பர் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 9.45 முதல் மாலை 5 மணி வரையில் மின் விநியோகம் இருக்காது.

மின் தடை குறித்த புகார்கள் மற்றும் தகவல்களுக்கு 1912 அல்லது, 18004252912 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Tags

Next Story
ai future project