திருச்சி பொன்மலை பணிமனையில் பாராபோலிக் சோலார் கான்சென்ட்ரேட்டர் திறப்பு
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் புதிதாக திறந்து வைக்கப்பட்ட பாராபோலிக் சோலார் கான்சென்ட்ரேட்டர்.
பல்வேறு ரோலிங் ஸ்டாக்குகளைப் பராமரிக்கும் போது, சுற்றுச்சூழலை மேம்படுத்துவதிலும், கார்பன் தடத்தைக் குறைப்பதிலும் தென்னக இரயில்வேயிலுள்ள பொன்மலைப் பணிமனையானது பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றது.
இந்த வகையில் பொன்மலைப் பணிமனையானது, பல்வேறு ரோலிங் ஸ்டாக் காம்பொனண்ட்களான போகி பிரேம்கள், ப்ரேக் ரிக்கிங் காம்பனண்ட்கள், என்ஜின் ப்ளாக்குகள் மற்றும் ஆக்ஸில் பாக்ஸ்களைச் சூடான நீரைக் கொண்டு சுத்தப்படுத்துவதற்காக ஊற வைத்து (சோக்கிங் பண்ணுவதற்கும்) பின்னர் சுத்தம் செய்யவும், தற்போதுள்ள மின்சார ஹீட்டர்களுக்கு மாற்றாக, பாராபோலிக் சோலார் கான்சென்ட்ரேட்டர் அடிப்படையிலான நீரை சூடாக்கும் அமைப்பை நிறுவியுள்ளது.
தென்னக இரயில்வேயின் பொது மேலாளர் ஜான் தாமஸ் பொன்லைப் பணிமனையின் அதிகாரிகள், சூப்பர் வைசர்கள் மற்றும் பணிமனைப்பணியாளர்கள் முன்னிலையில் ஆன்-லைன் மூலம் பாராபோலிக் சோலார் கான்சென்ட்ரேட்டரை திறந்து வைத்தார்.
இந்த அமைப்பானது பல்வேறு செயல்முறைகளுக்குத் தேவையான தண்ணீரை 82°C வரை சூடாக்கும் திறன் கொண்டது. சேகரிப்புத் தொட்டியில் உள்ள ஒரு நீர் வெப்பநிலைகாட்டியானது சூரிய குழாய் இணைப்பில் வழங்கப்பட்ட நீரின் வெப்பநிலையைக் காட்டுகிறது. சூடான நீரின் வெப்ப இழப்பைத் தவிர்க்க, சேமிப்புத் தொட்டி மற்றும் பைப்லைன் இரண்டிற்கும் முறையான காப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த யூனிட்டானது ஒரு நாளைக்கு 10,000 லிட்டர் சுடுநீரை சூரிய சக்தியை மட்டுமே பயன்படுத்தி உச்சக் காலத்தில் வழங்கும் திறன் கொண்டது. மழை மற்றும் மேகமூட்டம் உள்ள நாட்களில் சூடான நீரை வழங்க 'ஸ்டேண்ட்பை' அமைப்பில் பொருத்தப்பட்டிருக்கிறது.
பேக்அப் வழக்கமான மின்சார ஹீட்டருக்குப் பதிலாக சோலார் கான்சென்ட்ரேட்டா சிஸ்டத்தை நிறுவுவதன் மூலம், பணிமனையானது வருடத்திற்கு சுமார் 1,90,895 யூனிட் மின்சாரம் மற்றும் ரூ.15,27,160/- சேமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது வருடத்திற்கு 1,58,410 Kg CO2 அளவிற்கு கார்பன் தடத்தைக் குறைக்க இந்தப் பணிமனைக்கு உதவும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu