பொன்மலை ரயில்வே பென்ஷனர்ஸ் சங்க ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம்
பொன்மலையில் ரயில்வே பென்ஷனர்ஸ் சங்க ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
சதர்ன் இரயில்வே பென்ஷனர்ஸ் சங்கம் -பொன்மலையின் 39ஆவது ஆண்டு விழா மற்றும் பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சங்கத் தலைவர் டி.எஸ். கணேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் பி.ராமசாமி வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக பொன்மலை ரயில்வே முதன்மை பணிமனை மேலாளர் ஷ்யாமாதார் ராம், டாக்டர் விஜயலெட்சுமி R. நடராஜன் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
8-ஆவது சம்பளக் கமிஷனை விரைவில் அமைக்க வேண்டுகிறோம். இதனால் 8-ஆவது சம்பளக்கமிஷனை 2026-இல் அமல் செய்ய ஏதுவாக இருக்கும். உடனடியாக 8-ஆவது சம்பளக் கமிஷன் அமைத்து அறிவிக்க மத்திய அரசை வேண்டுகிறோம்.
31-12 & 30-06-ல் வேலையில் உள்ள அனைத்து தொழிலாளர்களும் ஒரு வருட முடிவில் வருடாந்திர சம்பள உயர்வு பெறுகிறார்கள். அதே போல் தொழிலாளர்கள் 31-12 & 30-06-ல் ஓய்வுபெறுபவர்களுக்கும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி ஒரு நோஷனல் இன்கிரிமெண்ட் (உத்தேச வருடாந்திர சம்பள உயர்வு) வழங்க இரயில்வே அமைச்சகத்தை வேண்டுகிறோம்.
மத்திய அரசு கொரோனா காலத்தில் 18 மாத பஞ்சப்படி நிலுவையை நிறுத்தி வைத்துள்ளது. அந்த 18 மாத பஞ்சப்படி நிலுவையை வேலையில் உள்ள/ஓய்வுபெற்ற இரயில்வே தொழிலாளர்களுக்கும் வழங்க மத்திய அரசை வேண்டுகிறோம்.
AIFPA-சென்னை பெடரேஷனை SCOVA மெம்பராக நிரந்தரமாக நியமிக்க மத்திய அரசை வேண்டுகிறோம்.
7-ஆவது சம்பளக் கமிஷன்படி FMA-யை பரிசீலிக்க அமைக்கப்பட்ட கமிட்டியில், இரயில்வே பென்ஷனர்களுக்கு FMA-யை ரூ.3000/- ஆக உயர்த்தவும் 2% கி.மீ. அப்பால் குடியிருக்கும் அனைத்து பென்ஷனர்களுக்கும் எவ்வித நிபந்தனையுமின்றி FMA வழங்க சிபாரிசு செய்ய வேண்டுகிறோம். FMA- வாங்கினாலும் அவர்களுக்கும் OPD- சிகிச்சை அளிக்க வேண்டுகிறோம்.
பென்ஷன் கம்யுடேஷன் பிடித்தத்தை 15 வருடத்திற்குப் பதிலாக 12 வருடத்திலேயே முடிவு செய்து 13-வது வருடத்திலிருந்து முழு பென்ஷனை வழங்க வேண்டுகிறோம்.
வயது முதிர்வு கூடுதல் பென்ஷனை 65 வயதிற்கு 5%.70 வயதிற்கு 10% மற்றும் 75 வயதிற்கு 15% என்ற வீதத்தில் வழங்கவேண்டுகிறோம்.
ரயிலில் முதல் வகுப்பு பாஸ்ஸில் பயணம் செய்ய III-A/C, II-A/C மற்றும் Chair Car முதலிய பெட்டிகளில் ஒவ்வொரு பெட்டியிலும் குறைந்தது 10% சீட்டுகள் இரயில்வே பென்ஷனர்களுக்கு ஒதுக்கிட வேண்டுகிறோம்.
முன்பு முதியோர்கள் டிக்கெட் எடுக்கும்போது ஒரு குறிப்பிட்ட சதவீதம் கட்டணச் சலுகையை இரயில்வே கொடுத்து வந்ததை தற்போது நிறுத்தியுள்ளது. முதியோர்களுக்கான கட்டணச் சலுகையை மீண்டும் வழங்க இரயில்வே அமைச்சகத்தை வேண்டுகிறோம்.
குடும்ப ஓய்வூதியத்தை 30% லிருந்து 40% உயர்த்த வேண்டுகிறோம்.
குடும்ப ஓய்வூதியம் பெறும் விதவை/மணமுறிவு/திருமணமாகாத மகள்களுக்கும் FMA-ஐ வழங்க வேண்டுகிறோம்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu