திருச்சியில் வாக்குப்பதிவு மையங்களுக்கு இ.வி.எம். இயந்திரங்கள் அனுப்பும் பணி
திருச்சியில் இ.வி.எம். இயந்திரங்களை வேனில் ஏற்றும் பணி நடந்தது.
தமிழக உள்ளாட்சி தேர்தல் நாளை நடைபெற உள்ள சூழ்நிலையில் அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள இடங்களுக்கு பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடத்துவதற்கான ஆயத்தப் பணிகள் தற்போது விருவிருப்பாக நடைபெற்றுவருகிறது.
அதற்காக இன்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோட்ட அலுவலகங்களில்இருந்து வாக்கு சாவடிகளுக்கு கொண்டு செல்லப்பட்டுவருகிறது. இதற்காக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் தலைமையில்துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், மாநகரத்திற்கு உட்பட்ட காவல் ஆய்வாளர்கள்,உதவி ஆய்வாளர்கள். உள்ளிட்டவர்களுடன் தேர்தல் பாதுகாப்பு பணிகளை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்துஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
நாளை அமைதியான முறையில் வாக்கு பதிவானதுநடைபெறும் வகையில் காவலர்கள் கவனத்தோடுபணிகளை மேற்கொள்ளவேண்டு என்றும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அதிகாரிகளுக்கும், போலீசாருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu