திருச்சி மாநகராட்சி பகுதியில் 60,613 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

திருச்சி மாநகராட்சி பகுதியில் 60,613 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
X

திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் ஒரு குழந்தைக்கு சொட்டு மருந்து வழங்கினார்.

திருச்சி மாநகராட்சி பகுதியில் 60,613 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தினை மேயர் அன்பழகன் வழங்கினார்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் எண் 5,வார்டு எண் 27 தென்னூர் நடுநிலைப் பள்ளி மற்றும் தில்லை நகர் மக்கள் மன்றத்திலும் மேயர் மு. அன்பழகன் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு முதல் தவணையாக போலியோ சொட்டு மருந்து வழங்கினார்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு 267 சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் 5 வயதிற்குட்பட்ட சுமார் 60,613 குழந்தைகளுக்கு முதல் தவணையாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இப்பணியில் 1036 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

இந்த மையங்கள் அரசு மருத்துவ மனைகள், மாநகராட்சி நகர் நல மையங்கள், சத்துணவு கூடங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய பொது இடங்களில் அமைக்கப்பட்டு இருந்தன. மேலும் ரயில்வே நிலையம், விமான நிலையம், பேருந்து நிலையங்கள், சுற்றுலா பகுதிகள் ஆகிய இடங்களில் நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு முகாம் நாட்களில் பயணம் மேற்கொள்ளும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிறமாநிலங்¦கள், மாவட்டங்களிலிருந்து இடம் பெயர்ந்து தொழில் புரிவதற்காக வந்து தங்கியுள்ள குடும்பங்¦களில் உள்ள குழந்தைகளுக்கு நடமாடும் குழுக்கள் மூலமாக சொட்டு மருந்துகள் வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செயயப்பட்டுள்ளன. இதற்கென 1036 பணியாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது தவிர ரோட்டரி, லயன்ஸ் சங்கத்தினர், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் மற்றும் தொண்டுள்ளம் படைத்தவர்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் மண்டல தலைவர் விஜயலட்சுமி கண்ணன்,நகர் நல அலுவலர் மணிவண்ணன், உதவி ஆணையர் வெங்கட்ராமன் உதவி செயற்பொறியளர் ராஜேஸ்கண்ணா மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கமால் பாட்ஷா, விஜயலட்சுமி, மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story
சும்மா விராட் கோலி மாதிரி ஃபிட்டான வாழ்க்கை வாழணுமா? இதான் டிரிக்ஸ்..!