பணியின் போது வீரமரணம் அடைந்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தி வீரவணக்கம்

பணியின் போது வீரமரணம் அடைந்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தி வீரவணக்கம்
X
திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவலர் நினைவு ஸ்தூபியில் மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் மலர் வளையம் வைத்து வீர வணக்கநாள் அஞ்சலி  செலுத்தினார்.
பணியின் போது வீரமரணம் அடைந்த போலீசாருக்கு திருச்சி போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ந்தேதி காவலர் வீரவணக்க நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.பணியின் போது வீரமரணம் அடைந்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தி, அவர்களின் நினைவை போற்றும் வகையில் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து திருச்சி சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள நினைவு ஸ்தூபியில் இன்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன், டி.ஐ.ஜி சரவணசுந்தர், எஸ்.பி.மூர்த்தி, மாநகர வடக்கு துணை ஆணையர் சக்திவேல், மாநகர தெற்கு துணை ஆணையர் முத்தரசு, திருச்சி மாநகர உதவி ஆணையர்கள், ஏ.டி.எஸ்.பி, டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ, தலைமை காவலர்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். பின்பு 66 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.

Tags

Next Story
ai in future agriculture