திருச்சியில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தலைமையில் குறைதீர்க்கும் முகாம்
திருச்சியில் டி.ஜி.பி. சைசேலந்திர பாபு தலைமையில் போலீசாருக்கான குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
உங்கள் துறையில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ், திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களை சேர்ந்த போலீசார் குறைதீர் முகாம் இன்று திருச்சியில் நடைபெற்றது.
திருச்சி சுப்பிரமணியபுரத்தில் நடைபெற்ற இந்த முகாமில் தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு கலந்து கொண்டு போலீசாரின் மனுக்களை பெற்றுக்கொண்டார். 600 மனுக்களை பெற்றுக்கொண்ட டி.ஜி.பி. மனுக்கள் குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் நேரில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகள் எடுக்க உடனடியாக அதிகாரிகளுக்கு உத்தரவுகளை பிறப்பித்தார்.
இது குறித்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேசும் போது காவல் துறையில் சவால்கள் அதிகம். உயிரையும் துச்சமென மதித்து பணி செய்து வருகிறோம். போலீசாரின் பணி என்பதே போர்க்கள பணி தான். போலீசாருக்கான நிலுவையில் உள்ள சிறு தண்டனைகளை உடனடியாக நிறுத்த வேண்டும். போலீசார் புது உற்சாகத்துடனும், மரியாதையுடனும் பணிபுரிய வேண்டும் என்ற முதல்வரின் அறிக்கையின் பேரில் இந்த முகாம் இந்த முகாம் நடைபெறுகிறது. இதன் அடிப்படையில் 1.33 லட்சம் போலீசார் மீது இருந்த சிறு தண்டனைகளை முதல்வர் ரத்து செய்து உத்தரவை பிறப்பித்தார். போலீசாருக்கான வார விடுமுறை, பஸ் பிரயாணத்தின் போது போலீசாருக்கு கொடுக்கப்பட்டுள்ள நவீன அடையாள அட்டையை காண்பித்து விட்டு செல்லலாம் என்பது போன்ற அறிவிப்புகள் வந்துள்ளன. 800 போலீசாரின் வாரிசுகளுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 800 பேருக்கு பணி வழங்க உள்ளோம்.
2020-ஆம் ஆண்டு வரை இறந்த போலீசாரின் வாரிசுகளுக்கு காவல் துறையில் பணி வழங்க உள்ளோம். போலீசாரின் குடும்பத்தினருக்கு தனியார் மற்றும் அரசு துறையில் வேலை வாய்ப்பினை பெற்று தரக்கூடிய முயற்சிகளும் நடைபெற்று வருகிறது. அனைவரும் உற்சாகத்துடன் பணியாற்ற வேண்டும் என்றார்.
எஸ்.எஸ்.ஐ பூமிநாதன் கொலை வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு பாராட்டு மற்றும் வெகுமதி வழங்கினார். இந்த முகாமில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன், திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவண சுந்தர், தஞ்சை சரக டி.ஐ.ஜி. பிரவேஸ் குமார், திருச்சி மாவட்ட எஸ்.பி,சுஜித் குமார் மற்றும் 8மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu