திருச்சியில் போலீசார் கஞ்சா வேட்டை: 6 நாட்களில் 21 பேர் அதிரடியாக கைது

திருச்சியில் போலீசார் கஞ்சா வேட்டை: 6 நாட்களில் 21 பேர் அதிரடியாக கைது
X
திருச்சியில் போலீசார் நடத்திய கஞ்சா வேட்டையில் 6 நாட்களில் 21 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

திருச்சி மாநகரில் போலீசார் நடத்திய ‘கஞ்சா வேட்டையில் ஆறு நாட்களில் 21 நபர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் அதிக அளவில் புழக்கத்தில் இருப்பதாக எதிர்க்கட்சிகளால் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக தமிழக காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். அவரது உத்தரவின்பேரில் தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக இந்த மாதம் 01.05.2023-ம்தேதி முதல் 15.05.2023-ம்தேதி வரை 15 நாட்;கள் ‘கஞ்சாவேட்டை 4.0”-ன்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதின்பேரில், திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா திருச்சி மாநகரத்தில் இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டறிந்து, அவர்கள்மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள, திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் வடக்கு மற்றும் தெற்கு, சரக உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கினார்.

இதனை தொடர்ந்து எடமலைபட்டிபுதூர் காவல்நிலைய பகுதியில் கஞ்சாவை விற்பனை செய்ததாக 5 நபர்கள் மீதும், கோட்டை காவல்நிலையத்தில் 4 நபர்கள் மீதும், காந்திமார்க்கெட் காவல்நிலையத்தில் 4 நபர்கள் மீதும், உறையூர் காவல்நிலையத்தில் 4 நபர்கள் மீதும், ஸ்ரீரங்கம் காவல்நிலையத்தில் 2 நபர்கள் மீதும், பாலக்கரை மற்றும் தில்லைநகர் காவல்நிலையத்தில் தலா ஒரு நபர் மீதும் என ஆக மொத்தம் 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டும், வழக்கின் குற்றவாளிகளான 21 நபர்களை போலீசார் கைது செய்தனர்.

அதில் இரண்டு நபர்களை நீதிமன்ற காவலுக்கு அனுப்பியும், அவர்களிடமிருந்து சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள 4கிலோ 750 கிராம் கஞ்சாவையும் ஒரு செல்போன் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகரத்தில், சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கவும், சட்ட விரோதமாக செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், கஞ்சா விற்பனை செய்யும் நபர்கள், வழிப்பறி குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் சமூகவிரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags

Next Story
ai solutions for small business