திருச்சி காவலர் குடியிருப்புகளில் போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் ஆய்வு

திருச்சி காவலர் குடியிருப்புகளில் போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் ஆய்வு
X

தூய்மை பணி நடப்பதை போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் ஆய்வு செய்தார்.

திருச்சி காவலர் குடியிருப்புகளில் போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் ஆய்வு செய்தார்.

திருச்சி மாநகர காவல்துறை சார்பில் ஒவ்வொரு சனிக்கிழமையும் தூய்மை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தூய்மை தினத்தன்று மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் காவல் நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்புகளுக்கு சென்று தூய்மையின் அவசியத்தை விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் நேற்று கமிஷனர் கார்த்திகேயன் திருச்சி ஆயுதப்படை வளாகத்தில் முதலில் ஆய்வு செய்தார். அதன் பின்னர் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து திருச்சி கண்டோன்மெண்ட் ‌‌, தில்லைநகர், செஷன்ஸ் கோர்ட் ,கோட்டை காவல் நிலையங்களில் ஆய்வுசெய்த கமிஷனர் கார்த்திகேயன் அதன் பின்னர் மார்சிங் பேட்டை காவலர் குடியிருப்பு, சிந்தாமணி காவலர் குடியிருப்பு பகுதிகளுக்கும் சென்று குடியிருப்புகளை தூய்மையாக வைத்துக் கொள்வது எப்படி என்பது பற்றி காவலர் குடும்பத்தினரிடம் அறிவுரைகள் வழங்கினார்.

Tags

Next Story