திருச்சி கடைவீதியில் காவல் உதவி மையம்: போலீஸ் கமிஷனர் திறந்தார்
திருச்சி கடைவீதியில் காவல் உதவிமையத்தை திறந்து வைத்த மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் கண்காணிப்பு கேமரா மூலம் பதிவான காட்சிகளை பார்வையிட்டார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருச்சி மாநகரம், கோட்டை மற்றும் காந்தி மார்க்கெட்காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், ஒவ்வொரு வருடமும் பாதுகாப்புக்காக தேவையான போலீசார்களை நியமித்தும், கண்காணிப்பு கோபுரங்கள், சி.சி.டி.வி. கேமராக்கள், டூம் கேமரா மற்றும் பொது விளம்பரங்கள் மூலமாக எந்தவித அசம்பாவிதமும் நிகழாமல், குற்றங்கள் தடுக்கஏற்பாடுகள் செய்யப்படுவது வழக்கம்.
அதே போன்று இந்த வருடமும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டுபொதுமக்களின் வசதிக்காகவும், பாதுகாப்புக்காகவும் முன்னேற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன.பொதுமக்களின்பாதுகாப்பை கருதிஅவர்கள், தங்களது உடைமைகளையும்,குழந்தைகளையும் கவனமாக பார்த்து கொள்ளவும், அசம்பாவிதங்கள் அல்லது சந்தேகப்படும்படியான நபர்கள் பற்றிய தகவல்களை தெரிவிக்கவும், அது சம்மந்தமான புகார் கொடுக்கவும்,என்.எஸ்.பி. ரோடு தெப்பக்குளம் அருகில் தற்காலிக காவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த காவல் உதவி மையத்தை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் இன்று திறந்து வைத்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu