/* */

திருச்சி மாவட்ட காவல் துறை சார்பில் 203 வாகனங்கள் பொது ஏலம்

திருச்சியில் குற்றம் மற்றும் விபத்து வழக்கு தொடர்புடைய 203வாகனங்கள் ஏலம் விடப்பட்டது.

HIGHLIGHTS

திருச்சி மாவட்ட காவல் துறை சார்பில் 203 வாகனங்கள் பொது ஏலம்
X

திருச்சியில் ஏலம் விடப்படுவதற்கு முன் வாகனங்கள் வரிசயைாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

திருச்சி சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில், குற்ற வழக்குகளில் தொடர்புடைய வாகனங்கள் மற்றும் விபத்தில் சிக்கிய இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்ற பிறகு பொது ஏலம் விடும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

இந்த ஏலத்திற்கு திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மூர்த்தி தலைமை தாங்கினார். இந்த ஏலத்தில் ஆம்னி வேன், கார்கள் என 4–நான்கு சக்கர வாகனங்களும்,

டி.வி.எஸ். 50, ஸ்கூட்டி விலையுயர்ந்த பைக்குகள் என 199–இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 203 வாகனங்கள் மைதானத்தில் ஏலத்திற்காக வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

முன்னதாக இந்த ஏலம் தொடர்பாக காவல்துறை சார்பில் பொது அறிவிப்பு வெளியிடப்பட்டது. இன்று காலை முதல் ஏலம் எடுப்பவர்கள் முன் தொகையாக ரூ.2 ஆயிரம் பணம் கட்டி ஏலத்தில் கலந்து கொண்டு வாகனங்களை தேர்வு செய்து தங்களுக்கான வாகனங்களை ஏலம் எடுக்க மைதானத்தில் குவிந்தனர்.

Updated On: 30 Sep 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க